உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கொள்ள நேரிட்டதாக மகாவம்சம் கூறுகிறது. இச்சிற்றரசுகளில் 'வேள்' சிற்றரசும் இருந்திருக்க இடமுண்டு. ராஜவாகினி என்ற நூல் 'வேளுசுமண' என்ற ஒற்றன் காக்க வண்ணதிஸனைச் சிறைப்பிடித்து அடிமையாக்குவதாக எல்லாள மன்னனிடம் உறுதி கூறியதாகக் கூறுகிறது (Ellawala 1969 : 61). இங்கே வேள், வேளுசுணை என்ற பெயர்கள் படைத் தளபதியாகக் கூறப்படுவது சங்க இலக்கியத்தில் வேள். வேளிர் போர் மறவர்களாக வருணிக்கப்படுவதை அப்படியே நினைவுபடுத்துகின்றன.

எனவே மேற்கூறப்பட்டவற்றில் இருந்து இலங்கைப் பிராமிக் கல்வெட்டுக்களில் வரும் 'வேள்' என்ற சொல்லைத் தனி நபர் பெயராகவோ, இனக் குழு சார்ந்த பெயராகவோ கொள்வதிலும் பார்க்க ஒரு பட்டப் பெயராகக் கருதுவதற்கே சான்றுகள் சார்பாக உள்ளன. கல்வெட்டுக்களில் சுமண என்ற பெயரின் முன்னொட்டுச் சொல்லாகக் கமணி. பருமக, கபதி போன்ற பட்டப் பெயர் வருவது போல் வேள் என்பதையும் ஒரு பட்டப் பெயராகக் கருதலாம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்வெட்டில் பருமகவேள் சுமணனின் மகன் பருமக வேள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது (Paranavilana 1970 : 647). இங்கே வேள் என்பது வம்சப் பெயராகப் பயன்படுத்தப்பட்டதெனக் கருத இடமளிக்கிறது. இதை உறுதிப்படுத்த மேலும் சான்றுகள் தேவை.

தமிழ் நாட்டில் ஆநிரை கவர்தல் அல்லது பொருளாதார உற்பத்தியில் ஏற்பட்ட போட்டி இனக் குழுக்களிடையே 'வேள் தோன்றக் காரணமாகும். தமிழ் நாட்டில் பயன்படுத்தப்பட்ட இச்சொல் சமகாலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்டமைக்கு முதலில் வெளிநாட்டு வர்த்தகம் காரணமாக இருக்கலாம். இலங்கைக்கும் தமிழ் நாட்டிற்கும் இடையிலான நெருக்கமான வர்த்தகத் தொடர்புக்கான சான்றுகள் பெருங்கற்காலப் பண்பாட்டிலிருந்து தெளிவாகக் காண முடிகிறது. இவ்வர்த்தகத்தைத் தலைமையேற்று நடத்திய தலைவர்கள் தமிழ் நாட்டுத் தொடர்பால் வேள்' என்ற பட்டப் பெயரைப் பெற்றிருக்கலாம் தமிழ் நாட்டில் புகளூர்க் கல்வெட்டில் ஆதன்' என்ற வணிகன் பெயரின் முன்னொட்டுச் சொல்லாக வேள் குறிப்பிடப்பட்டுள்ளது (வேங்கடசாமி 1983:58-59), இப்பெயர்கள் குலம். கடவுளைக் குறிப்பாகக் கருதப்படுகிறது ஆனால் இதைப் பட்டமாகக் கருதவும் இடமுண்டு. காலப்போக்கில் இப்பெயர் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைவர்களையும். குறுநில மன்னர்களையும். படைத் தளபதிகளையும் அரசு அதிகாரிகளையும் குறித்திருக்க இடமுண்டு மகா வம்சம் தமிழ் நாட்டிலிருந்து குதிரைகளைக் கொண்டு வந்த வணிகத் தலைவனின் பிள்ளைகளான சேனன், குத்திகன் என்ற தமிழர்களே இலங்கையில் ஆட்சி புரிந்த முதல் தமிழ் மன்னர்கள் எனக் கூறுவது இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

114

துணை நூற்பட்டியல்

சுப்பராயலு. எ. 1991. 'ஆள் பெயர்கள் காட்டும் சமுதாயம்' தமிழகக் கல்வெட்டியலும் வரலாறும்

காகிதச்சுவடி ஆய்வுகள்