உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ம.சா. அறிவுடைநம்பி தலைவர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

சுவடிகளும் ஆவணங்களும்

சாய்லன் (T'Sai Lun) என்ற சீன அறிஞர் கி. பி. 105இல் பல்வேறு பொருள்களைப் பயன்படுத்திக் காகிதம் செய்யும் முறையைக் கண்டுபிடித்தார். அதன் பின்னர்தான் காகிதம் மக்களின் பயன்பாட்டிற்கு வந்தது. இக் காகிதம் இந்தியாவிற்கு முதன்முதலில் முகமதியார்களால் கி. பி. 11ஆம் நூற்றாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது.. தற்பொழுது காகிதங்களின் புழக்கமே உலகெங்கிலும் இருந்து வருகின்றது. சுவடி என்று சொன்னவுடனேயே அது ஓலைச்சுவடியைக் குறிப்பதாகவே பலரும் கூறுவதுண்டு. மனிதன் தோன்றிய ஆதி காலத்தில் அவன் மலை, காடு, குகை போன்ற இடங்களில் வாழ்ந்து வந்தான். அப்பொழுது அவன் தன் எண்ணங்களைச் சித்திர வடிவில் மலைகளின் மீதும், குகைகளிலும் செதுக்கினான். அதன் பின்னர் ஒருவகையான புல் (Papyrus). ஓடு, களிமண் பலகை, மூங்கிற்பத்தை. பனைஓலை, தோல், பூர்ச்சபத்திரம், துணி, எலும்பு, மரப்பட்டை போன்ற பல பொருள்களில் எழுதினான். இந்தியாவைப் பொறுத்த அளவில் காகிதம் பழக்கத்திற்கு வராத காலத்திற்கு முன்பு மக்கள் ஓலை நறுக்குகளில் எழுத்தாணி கொண்டு எழுதினர். கரும்பலகை வழக்கத்திற்கு வராத அக்காலத்தில் மாணவர்கள் புதுமணலில் வரிவடிவ எழுத்துக்களைக் கைவிரலால் எழுதிப் பழகினர். காகிதம் பழக்கத்திற்கு வந்த பிறகும்கூடச் சிலவிடங்களில் ஓலைகளிலும் எழுதி வருகின்றனர். சுவடிகள், ஆவணங்கள் என்றால் என்ன? அவற்றின் விளக்கம். ஆய்விற்கு இவை பயன்படும் விதம் போன்றவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

சுவடி விளககம்

கல்வியறிவு பெறுவதற்கு அடிப்படையாக இருப்பவை சுவடிகளாகும். தமிழில் 'சுவடி' என அழைக்கப்பெறும் சொல் ஆங்கிலத்தில் 'Manuscripts' எனக் கூறப்பெறுகிறது. இச்சொல் இலத்தீன் மொழிச் சொல்லான 'Manuscriptus' என்பதிலிருந்து ஆங்கிலத்தில் 'Manuscripts' என மாறி வந்துள்ளது. 'சுவடி என்ற சொல்லிற்கு

"அச்சு நூலுக்கு வேறுபட்ட, கையினால் அல்லது வேறு முறையினால் எழுதப்பட்ட ஓர் ஆவணம் அல்லது நூல்"

1. Oxford Advanced Learner's Dictionary, Oxford University Press, p 526.

காகிதச்சுவடி ஆய்வுகள்

1