உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்ற பொருளை ஆங்கில அகராதி கூறுகிறது. பொதுவாகச் 'சுவடி' என்பது ஓலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதப்பெற்ற நூல்களையே குறித்து வந்துள்ளன. நாளடைவில் அச்சுப் புத்தகம் முதலியவற்றையும் 'சுவடி' எனக் குறிப்பிடுவது வழக்கமாயிற்று. இதழ்கள் பல சேர்ந்தவற்றைச் சுவடிப் புத்தகம்' என்றும் 'சுவடிப் பொத்தகம்' என்றும் அழைத்தனர். அதன் பின்னர்ச் சுவடிப் புத்தகங்களை 'நூல்' என்று குறிப்பிடும் வழக்கம் ஏற்பட்டது.

சுவடுஇ = சுவடி சுவடு உடையது சுவடி எனக் காரணப்பெயர் பெறுகிறது. தமிழில் வழக்கத்தில் இணையான தடத்தைச் 'சுவடு' எனக் கூறுவர். 'சுவடி' என்பது இணையான ஓலையாகும்.

"பட்டுச் சுவேதமொடு பாட்டுப்புற மெழுதிய

கட்டமை சுவடி பற்றிய கையினர்"2

என்று கொங்கு வேளிர் கூறுகின்றார். நூல்நிலையத்தைப் பாரதிதாசன் 'சுவடிச்சாலை' என்கின்றார்.

"மிகப் பழங்காலத்தில் அல்லது இடைக்காலத்தில் எழுதப்பெற்ற எழுத்துப் படிவங்களைக் குறிப்பதற்குச் சுவடி என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது "3

என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் கூறுகிறது.

இவ்வாறு அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் வழக்குகளில் வழங்கப்பெறும் பல்வேறு விளக்கங்களிலிருந்து கையெழுத்துப்படி கையால் எழுதிய பிரதி, எழுதிய புத்தகம், ஏட்டுப் புத்தகம், புத்தகம், அச்சடிப்பதற்குக் கொடுக்கப்படும் மூலவரைப்படி ஓலைப்புத்தகம் ஆகியவற்றைச் சுவடியாகக் கொள்ளலாம்.

கையெழுத்துச் சுவடி

பாரசீகத்திலிருந்து மராத்தி மொழி வழியாகக் 'காகிதம்' என்ற சொல் வந்தது. எழுதுவதற்குப் பயன்படக்கூடிய மெல்லிய பொருளைக் காகிதம் என்று அகராதிகள் கூறுகின்றன பெரும்பாலும் தொடக்க காலத்தில் ஓலைச்சுவடிகளிலிருந்து காகிதத்தில் படி எடுக்கப்பட்டதைக் காணமுடிகின்றன. நூலைப் பதிப்பிக்கின்ற பொழுதும், நூலின் பிரதி கிடைக்காமல் இருந்த நிலையிலும் அந்நூலைப் பார்த்துப் பிரதி செய்யும் வழக்கம் எழுந்தது. ஓலையிலிருந்து மற்றொரு ஓலையிலும் அல்லது தாளிலும் பிரதி செய்தனர். பாடம் சொல்வதற்காகவும், சொற்பொழிவு செய்வதற்காகவும் தாள்களில் தம் கைப்பட எழுதி வைத்தும் பிரதி செய்து வைத்தும் இருந்தமையைக் காணமுடிகின்றது. தாள் கண்டுபிடிக்கப்பட்டுப் பரவலாக அனைவராலும் அத்தாள் பயன்படுத்தத் தொடங்கிய பின்னர்த் தாளிலேயே எழுதத் தொடங்கினர். இதனால் மூலச்சுவடிகளும், பிரதி எடுக்கப்பட்ட சுவடிகளும் தாள்களிலேயே அமைந்தன. தாளில் எழுதப்பட்ட சுவடியாக இருந்தாலும் பிறவற்றிலிருந்து படி எடுக்கப்பட்ட சுவடியாக இருந்தாலும்

2. கொங்குவேளிர், பெருங்கதை. 3. 1 119-120.

3. Encyclopaedia Britannica, Volume XVIII, p. 618.

2

காகிதச்சுவடி ஆய்வுகள்