உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அவற்றைக் கையெழுத்துச் சுவடிகள் என்று கூறுவது பொருந்தும். பின்னாளில் இத்தகைய சுவடிகள் ஏராளமாகப் பல்கிப் பெருகின.

சுவடி வகைகள்

களிமண் ஓடுகளில் எழுதப்பெற்ற ஓட்டுச்சுவடி எலும்பில் எழுதப்பெற்ற எலும்புச்சுவடி, மூங்கில் பத்தைகளில் எழுதப்பட்ட மூங்கிற்சுவடி. சில மரங்களின் உள்பட்டைகளில் எழுதப்பட்ட லிபர் சுவடி. பேபரைசு என்ற ஒருவகைக் கோரைப்புல்லில் எழுதப்பட்ட மரப்பட்டைச் சுவடி (Papyrus Manuscript). பூர்ச்சமரப்பட்டைகளில் எழுதப்பட்ட பூர்ச்சமரப் பட்டைச் சுவடி (Birch Bark Manuscript). வெள்ளாடு. செம்மறியாடு, கன்றுக்குட்டி ஆகியவற்ற்றின் தோலில் எழுதப்பட்ட தோல் சுவடி (Parchment Manuscript). பனையோலைகளில் எழுதப்பட்ட ஓலைச்சுவடி (Palmleaf Manuscript). பலகையில் எழுதப்பட்ட பலகைச் சுவடி, தங்கத்தகட்டில் கரோஸ்தி எழுத்துக்களில் எழுதப்பட்ட உலோகச் சுவடி பருத்தி மற்றும் பட்டுத்துணிகளில் எழுதப்பட்ட துணிச் சுவடி போன்ற சுவடிகள் உலகின் பல்வேறிடங்களில் மக்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இச்சுவடிகள் அருங்காட்சியகங்களிலும், சுவடி நூலகங்களிலும். பொது நூலகங்களிலும் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

7

2.

3.

இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுவடிகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

காப்பகங்களின் பெயர்களில் அமைபவை

சேகரித்தோர் பெயர்களில் அமைபவை

பொருளடிப்படையில் அமைபவை

இவற்றுள் சேகரித்தோர் பெயர்களில் உள்ள சுவடிகளும் பொருளடிப்படையில் அமைகின்ற சுவடிகளும் பெரும்பாலும் காப்பகங்களிலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ 200க்கும் மேற்பட்ட பொருள்களில் இத்தகைய சுவடிகள் இருக்கின்றன. காப்பகங்களில் சேகரிக்கப்பட்ட சுவடிகளை இப்பகுதி ஆராய்கிறது.

காப்பகங்கள்

கல்வி கற்றதன் அடிப்படையிலேயே சுவடிகள் உருவாகின. முற்காலத்தில் ஓலைகள் கிடைப்பது எளிதாகவும் அதிகச் செலவின்றியும் இருந்தன. அதனால் ஓலைகளின் பயன்பாடு மிகுதியாக இருந்தது. மேலும் அவற்றை எடுத்துச் செல்வதற்கு வசதியாகவும் இருந்தது. எவ்விதச் சிரமமுமின்றி அவற்றில் எழுதவும். திருத்தம் செய்யவும், வேறு படிகள் எடுக்கவும் எளிமையாக முடிந்தது. இதனால் பல நூல்கள் ஓலைச்சுவடிகளிலேயே எழுதப்பட்டன. கற்கும் நிலையிலும், பிறர் படிப்பதற்காகவும். அச்சிடுவதற்காகவும். திருத்தப் பதிப்பிற்காகவும் ஏராளமான அளவில் சுவடிகள் பெருகின.

இச்சுவடிகளையெல்லாம் தொகுத்தல் வேண்டும் என்ற உணர்வு தமிழர்களுக்கு ஏற்பட்டது. சங்க இலக்கியத் தொகுப்புத் தொடர்பாக உ.வே. காகிதச்சுவடி ஆய்வுகள்