உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சாமிநாதையர் கூறுவதை இவண் சுட்டுவது பொருந்தும்.

"பலவகை நூல்களும் செய்யுட்களும் கால நிலையினால் தமிழ் நாட்டவரால் புறக்கணிக்கப்பட்டோ வேறு வகையில் மறைந்தோ அருகினபோலும். பிறகு கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் இருந்த புலவர்களும் அரசர்களும் தமிழாராய்ச்சியில் ஊக்கங்கொண்டு பழந்தமிழ்ச் செய்யுட்களைத் தொகுக்கத் தொடங்கினர். அங்ஙனம் தொகுத்தனவே பாட்டு, தொகை, கீழ்க்கணக்கு என்ற மூன்று வகை நூற்றொகுதிகளாதல் வேண்டும் 4

முதலாம் இராசராச சோழன் தேவாரத் திருமுறைகளை நம்பியாண்டார் நம்பி மூலம் தொகுத்தமையை இடைக்கால வரலாறு காட்டுகிறது.

பிற்காலத்தில் காலின் மெக்கன்சி. லெய்டன், அ. முத்துசாமிப்பிள்ளை. பிரௌன், எல்லிஸ், எடோர்ட் ஏரியல். இரண்டாம் சரபோசி, பாண்டித்துரைத் தேவர். வி. கனகசபைப்பிள்ளை, உ வே. சாமிநாதையர் முதலானோர் சுவடிகளைத் தேடித் தொகுத்துப் பாதுகாத்தனர்.

பின்னர்க் காலப்போக்கில் சுவடிகளைப் பாதுகாத்து வைப்பதற்கென்று காப்பகங்கள் உருவாயின. தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் அரசு நிறுவனங்கள். கல்வி நிறுவனங்கள், சமய நிறுவனங்கள். பொது நிறுவனங்கள் ஆகியவற்றில் சுவடிகள் சேகரிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தவிரச் சிலர் தாங்களே ஆர்வம் காரணமாகத் தனியாகச் சேகரித்து அவற்றைத் தங்கள் இல்லங்களில் பாதுகாத்து வருகின்றனர்.

சென்னையில் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூல்நிலையம். உ. வே. சாமிநாதையர் நூல்நிலையம். தஞ்சைச் சரசுவதி மகால் நூல்நிலையம், திருவாவடுதுறை ஆதீனம், தருமபுர ஆதீனம். காசித் திருமடம். ஏசு சங்க ஆவணக் காப்பகம். மதுரைத் தமிழ்ச் சங்கம், கரந்தைத் தமிழ்ச் சங்கம். தமிழ்ப் பல்கலைக்கழகம். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். ஆசியவியல் நிறுவனம் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். இக்காப்பகங்களில் உள்ள சுவடிகளைத் தனித்தனியாக ஆய்வு செய்தல் வேண்டும். இக்கட்டுரையில் ஒருசில சுவடிகள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன.

மெக்கன்சிச் சுவடிகள்

ஸ்காத்லாந்து நாட்டில் லூவித் தீவில் 1754இல் பிறந்த காலின் மெக்கன்சி தம் 30ஆம் வயதில் இந்தியாவுக்கு வந்தார். தம் வாழ்நாள் முழுமையும் (கி.பி. 1821 வரை) இந்தியா. இலங்கை, ஜாவா ஆகிய நாடுகளில் கம்பெனிப் பணிகளுக்காகச் சென்று வந்தார். 1810இல் சென்னையில் தலைமை நில அளவையாளராக (Surveyar General) நியமிக்கப் பெற்றார்.

இவர் தமது அலுவலகப் பணிகளுடன் சுவடிகளையும். தொல்பொருள் கலைச் செல்வங்களையும் தேடித் தொகுத்தார் இப்பணிக்காகத் தமது ஊதியம் 4.உ வே.சாமிநாதையர் (ப. ஆ). குறுந்தொகை. முன்னுரை.

காகிதச்சுவடி ஆய்வுகள்