உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




5.

6.

முழுவதையும் செலவழித்தார். அத்துடன் தமது சொந்தப் பணத்தையே இதற்காகச் செலவிட்டார். இப்பணியில் இவருக்குப் பலர் உதவியாகவும் இருந்தனர். இவர் தொகுத்த சுவடிகள் அனைத்தும் தற்பொழுது சென்னையிலுள்ள அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூல்நிலையத்தில் உள்ளன. இத்தொகுப்பில் வரலாறு. சரித்திரம். வமிசாவளி. தலபுராணம், கைபீயத்து, கல்வெட்டு. இலக்கியம் போன்ற தலைப்புகளில் ஏறத்தாழ. 1379 தமிழ்ச் சுவடிகள் இருக்கின்றன.

மெக்கன்சிச் சுவடிகள்' எனுந்தலைப்பில் உள்ள இச்சுவடிகள் குறித்துப் பல்வேறு அறிஞர்கள் தங்கள் கருத்துக்களைக் கூறியுள்ளனார். வி.ஆர்.ஆர். தீட்சிதர். அவர் (மெக்கன்சி) தம் உழைப்பின் பயனாகக் கிடைத்தவைதாம் இப்போதுள்ள வரலாற்றுக் கையெழுத்துப் பிரதிகளும். பிறவுமாய் இருக்கின்றன. இந்தத் தொகுப்பைப் போல ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் இதுவரைக்கும் யாரும் செய்ததில்லை. எப்படி யார் சொன்னாலும் மெக்கன்சி செய்த வேலையை மாத்திரம் உயர்வு நவிற்சிக்குள் அகப்படுத்த முடியாது. உண்மையான வேலையென்றும் உழைப்பென்றும் எவரும் கூறுவர்"

என்கின்றார்.

ஓயா

மெக்கன்சிச் சுவடிகளைத் தரவுகளாகக் கொண்டு ம. இராசேந்திரன் மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் - ஓர் ஆய்வு எனுந்தலைப்பிலும், கா. சத்தியபாமா மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் சுட்டும் மக்கள் வாழ்வியல்' எனுந்தலைப்பிலும் முனைவர் பட்டம் பெறுவதற்காக ஆய்வு செய்துள்ளனர். ம. இராசேந்திரன் தம் ஆய்வேட்டில்.

இந்திய வரலாற்றிலேயே கல்வெட்டுகளைப் படியெடுத்த முதல் வரலாற்றறிஞர் மெக்கன்சியாகத் திகழ்கிறார். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையினரால் படியெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளைவிட 160 கல்வெட்டுகள் மெக்கன்சித் தொகுப்பில் அதிகமாக இடம்பெறுகின்றன. அவை தற்பொழுது படியெடுக்க முடியாத நிலையில் சிதைந்து அழிந்து போயிருக்கின்றன. இனி அவற்றிற்கு மெக்கன்சியின் தொகுப்பே மூலமாகும்"5

என்கின்றார். மேலும் கா. சத்தியபாமா தம் ஆய்வேட்டில்,

"திருமலைநாயக்கர் மரணம் இயற்கையா? செயற்கையா? என்பதுபற்றி இறுதி முடிவிற்கு மெக்கன்சி சுவடியே சான்றளிக்கிறது. மேலும் திருமலை நாயக்கர் காலத்தில் தொழிலாளர்கள் நடத்திய போராட்டமும் தெரிய வருகிறது

-6

ம.இராசேந்திரன். மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் ஓர் ஆய்வு. வெளியிடப்படாத முனைவர் பட்ட ஆய்வேடு. சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை, 1984, பக் 66-67, மேற்கோள்: கா. சத்தியபாமா, மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள் சுட்டும் மக்கள் வாழ்வியல். வெளியிடப்படாத முனைவர் பட்ட ஆய்வேடு. தமிழ்ப் பல்கலைக்கழகம். தஞ்சாவூர், 1998, ப. 15. காகிதச்சுவடி ஆய்வுகள்