உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்கின்றார்.

இவர்களின் கூற்றுகளிலிருந்து மெக்கன்சிச் சுவடிகள் வரலாற்றாய்விற்கு எந்த அளவிற்குச் சிறப்புத் தரும் என்பதை அறியமுடிகிறது.

ஏறத்தாழ இருநூறு. முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழகத்தின் அரசியல்நிலை, குறுநில மன்னர்கள் மற்றும் பாளையக்காரர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், சமூகநீதி, சமுதாயப் பழக்க வழக்கங்கள், மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள். பண்பாடு. அக்கால மொழி அமைப்பு. மொழி நடை, நாகரிகம். ஆடை அணிகலன்கள் முதலானவற்றை அறிந்து கொள்வதற்கு மெக்கன்சிச் சுவடிகள் தகுந்த சான்றுகளாகத் திகழ்கின்றன. இச்சுவடிகளை விட்டு விட்டு அக்காலச் சமுதாயத்தையோ. தமிழக வரலாற்றையோ எழுதினால் அவை முழுமையற்றுப் போய்விடும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

ஆதீனச் சுவடிகள்

சமயத்தோடு தொடர்புடைய திருமடங்கள் கல்வி நிலையங்களாக விளங்கின அதனால் பல்வேறிடங்களிலிருந்து மாணவர் பலர் இங்கு வந்து, தங்கியிருந்து கல்வி பயின்றனர்: இவர்கள் தங்குவதற்கு இடமும் உணவும் அளித்துக் கல்வியைக் கற்றுத் தருவதில் ஆதீனங்கள் பேரார்வம் காட்டின. இத்தகு ஆதீனங்களில் சுவடிகள் இதனால் பல்கிப் பெருகின. அவற்றைப் பாதுகாப்பதற்கென்றே 'சரசுவதி பண்டாரம்' என்ற பெயரில் நூல் நிலையங்கள் தொடங்கப்பட்டன.

தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் திருவாவடுதுறை, தருமபுரம். திருப்பனந்தாள், சித்தாமூர், மதுரை, துறையூர். விருத்தாசலம், செப்பறை, வானமாமலை. காஞ்சிபுரம் முதலான ஊர்களில் உள்ள சமயத் திருமடங்களில் சுவடிகள் பல காணப்படுகின்றன. வேதம், ஆகமம், புராணம். சோதிடம், தத்துவம், இலக்கணம். இலக்கியம் முதலான பலவகை நூல்கள் தமிழ். வடமொழி, தெலுங்கு. மலையாளம் முதலான மொழிகளில் உள்ளன. இவ்வாறு பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள சுவடிகள் தமிழ், கிரந்தம். வடமொழி தெலுங்கு ஆகிய மொழிகளில் எழுதப்பட்டுள்ளன. ஓலைகளிலும், தாள்களிலும் அமைந்துள்ள இச்சுவடிகள் திருமுறை, சைவ சித்தாந்தம். தத்துவம். புராணம். தலபுராணம். தோத்திரம், திவ்வியப் பிரபந்தம். இலக்கணம். காப்பியம். கலைகள். சிற்றிலக்கியங்கள். ஆகமம். மருத்துவம், சோதிடம், மந்திரம் முதலான பொருள்களில் அமைகின்றன.

6

திருமுறைகளில் இவருடைய (17ஆவது குரு மகாசந்நிதானம் சீர்வளர் சீர் அம்பலவாணதேசிக பரமாசாரிய சுவாமிகள்) நுண்ணறிவு நன்றாகச் சென்று திளைத்துத் தேக்கிட்டமையின் பலவகையான குறிப்புகள் எழுதிச் சேகரித்தார். ஆதீனத்துப் புத்தகசாலையில் உள்ள ஏட்டுச்சுவடிகளில் பலவற்றைத் தமது திருக்கரத்தால் காகிதங்களில் பிரதி செய்து உயர்ந்த பட்டுக் கட்டிடங்களால் அழகுபடுத்திப் பொன் முலாம் பூசிப் பாதுகாத்துள்ளார்கள். இசைப்பயிற்சியிலும் இணையற்றவர்கள்.

காகிதச்சுவடி ஆய்வுகள்