உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சங்கீத சம்பந்தமான சில குறிப்புக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். இயல். இசை, நாடகம் ஆகிய முத்திறத்திலும் மூதறிவுடையவர்கள் என்பது மிகையன்று. ஆதீன குலதெய்வமாக விளங்கும் ஸ்ரீ மாதவச் சிவஞான சுவாமிகள் தமது திருக்கரமலரால் எழுதியுள்ள சிவஞான போத திராவிட மாபாடியத்தை மூன்று முறை பெயர்த்துக் காகிதப் பிரதி பண்ணியுள்ளார்கள்

என்ற குறிப்பின் மூலம் காகிதத்தில் பிரதி செய்து பாதுகாத்தமையை அறியமுடிகிறது. ஏசு சங்கச் சுவடிகள்

கொடைக்கானலிலுள்ள செண்பகனூரில் 'ஏசு சங்க ஆவணக் காப்பகம் (Jesuit Archives) உள்ளது. இக்காப்பகத்தில் கி. பி. 16 இலிருந்து 20ஆம் நூற்றாண்டு வரை மதுரை மாநிலத்தில் உழைத்த திருச்சபைத் தொண்டர்களின் கடிதங்கள். நாட்குறிப்புகள், சுவடிகள், நூல்கள் போன்றவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலை மற்றும் தாள் சுவடிகள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இக்காப்பகத்தில் உள்ளன. இவை தமிழ். ஆங்கிலம், இலத்தீன், பிரெஞ்சு, போர்த்துக்கீசியம் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாறு. இலங்கை. பாண்டிச்சேரி. கோவா ஆகியவற்றைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள், தமிழ் இலக்கியத்திற்குக் கிறித்தவத் தொண்டர்கள் ஆற்றிய பணிகள் போன்ற பலவற்றைப் பற்றிய செய்திகள் இச்சுவடிகளில் பரந்துபட்டுக் காணப்படுகின்றன.

சுவடிகளைப் பொறுத்த அளவில் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் வாழ்வுக்குப் பயன்படும் சுவடிகளே பெரும்பாலும் உள்ளன. இச்சுவடிகளை எழுதினோர் பெயர், காலம் போன்றவற்றை அறிய இயலவில்லை. பல சுவடிகள் ஒரே கையெழுத்தில் உள்ளன. மூலச்சுவடிகள், படியெடுத்த சுவடிகள் ஆகிய இரண்டுக்குமுரிய வேறுபாடுகள் தெரியவில்லை.

பரிமேலழகர் உரையுடன் கூடிய திருக்குறள். மழவை மகாலிங்க ஐயரவர்களின் இலக்கணச் சுருக்கம். வீரமாமுனிவரின் தமிழ் இலத்தீன் அகராதி. போர்த்துக்கீசிய இலத்தீன் தமிழ் அகராதி. ராஜரிஷி வீரமாமுனிவர் எழுதிய வைத்திய வகார விமரிசை வெண்பா போன்ற சுவடிகள் அவற்றுள் ஒருசிலவாம்.

இறைவன், இயேசுபிரான். விவிலியம். கிறித்தவ இறையியல், மறைக்கல்வி. துறவற சபை ஒழுங்குகள். திருச்சபை வரலாறு. பிற சமயத் தொடர்பு, இலக்கியம். இலக்கணம். மருத்துவம். அகராதி போன்ற தலைப்புகளில் இச்சுவடிகள் அமைந்துள்ளன.

இந்த ஆவணக் காப்பகத்தில் உள்ள சுவடிகளைப் பயன்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்வது இக்கால இளைஞர்தம் கடமையாகும்.

7. த க. மீனாட்சிசுந்தரம் பிள்ளை, திருவரவடுதுறை ஆதீன வரலாறு. திருவாவடுதுறை.1950.

L. 95-96.

காகிதச்சுவடி ஆய்வுகள்

7