உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆவணங்கள்

நி

அரசு அலுவலகங்களில் 'கோப்புகள் என்று சொல்லப்படுபவையும் அரசு நடவடிக்கைகள. தீர்மானங்கள் முதலானவையும் ஆவணங்கள் என்று சொல்லப்படுகின்றன. எழுத்துருவப் பதிவுகள் ஆவணம் ஆகும். தாள். புத்தகம். ஓலை,கல் செப்புத்தகடு, நிழற்படம். நகரும் படச்சுருள். நுண்படச்சுருள். வரைபடம். தேசப்படம் போன்றவற்றில் பதிவு செய்வனவாக இருப்பன ஆவணம் ஆகும். நிலத்தைக் கிரையம் செய்தல், நிலத்தை அடைமானம் வைத்தல். நிலத்தை ஒப்பந்தம் செய்தல், சொத்து விவரம். உயில்கள் போன்ற பொது மக்களால் பயன்படுத்தப்பெற்ற பத்திரங்கள் ஆய்வுக்குப் பயன்படுத்தப்படும் பொழுது அவற்றை ஆவணம் என்று கூறுவதில் தடையேதுமில்லை. இத்தகைய ஆவணங்கள் பெரும்பாலும் அரசு முத்திரைத் தாள்களில் கையால் எழுதப்பட்டனவாக இருக்கும். இவற்றில் இன்னாரால் இன்ன நாளில் எழுதப்பட்டது. இன்னார் சாட்சியாக இருந்தனர்; இன்னார் முன்னிலையில் இன்னார் கையொப்பம் அல்லது இன்னாரது இடதுகைப் பெருவிரல் இரேகை. இன்ன நாளில் இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது முதலான குறிப்புகள் காணப்படும். இவ்வாறு பத்திரங்களைப் பதிவு செய்யும் அலுவலகம் ஆவணக்களம்' என்றழைக்கப்பெறுகிறது.

ஆவணம் என்பதற்கு அடையாளம். கடைத்தெரு. முறிச்சீட்டு. அடிமைத்தனம். உரிமை

என்ற ஆங்கிலச் சொல்லிறகுகளை அகராதி குறிப்பிடுகிறது. Document'

பத்திரம். ஆதாரமூலம். ஆதாரச் சான்று என்ற பொருளகளை ஆங்கிலம் - தமிழ் அகராதி கூறுகிறது.9

'எழுத்துகள் எண்கள் குறிகள் ஆகியவற்றைக் காகிதம். ஓலை. செப்புத்தகடு. கல் போன்றவற்றில் செய்தியாகப் பொறித்து வைக்கப் பெறுவது. உரிமைப் பத்திரம் என்றும் கிரையப் பத்திரம் என்றும் 20

பெருஞ்சொல்லகராதி விளக்குகிறது.

வரலாற்றுச் சிறப்புக் கொண்ட இத்தகைய ஆவணங்கள் அரசு நிறுவனங்கள். ஆவணக் காப்பகங்கள். சுவடி நூல் நிலையங்கள். அருங்காட்சியகங்கள். பல்கலைக்கழகங்கள் முதலானவற்றில் சேகரித்துப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் ஒருசில ஆவணங்கள் ஆராயப்படுகின்றன

மோடி ஆவணங்கள்

பதினேழு.பதினெட்டாம் நூற்றாண்டுகளில் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்த மராத்திய மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் 'மோடி' என்னும்

9

கழகத் தமிழ் அகராதி, கழக வெளியீடு. சென்னை. 1980. ப 86.

A.C.Chettiar (Chief Editor), English-Tamil Dictionary, University of Madras, 1965, p 314

10 முத்து சண்முகம்பிள்ளை (முதன்மைப் பதிப்பாசிரியர்) பெருஞ்சொல்லகராதி தொகுதி 2. தமிழ்ப பல்கலைக்கழகம் தஞ்சாவூர் 1989. பக் 221-222.

8

காகிதச்சுவடி ஆய்வுகள்