உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




எழுத்து பயன்பாட்டில் இருந்தது. மராத்தி மொழியின் சுருக்கெழுத்தே மோடி எழுத்தாகும். தாளில் உள்ள இம் மோடி ஆவணங்கள் தஞ்சை மராத்திய மன்னர்களின் வரலாறு. கலைகள், இலக்கியப் பணிகள், மருத்துவப் பணிகள். அக்கால அரசியல் சமுதாயம் போன்ற பலவற்றை அறிவதற்கு மூலச்சான்றுகளாகத் திகழ்கின்றன. சுருக்கமாகச் சொன்னால் அக்காலத் தென்னிந்திய வரலாற்றை அறிவதற்குரிய புதிய செய்திகளைத் தன்னகத்தே கொண்டு திகழ்கின்றன என்றால் அது மிகையில்லை.

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மோடி ஆவணங்கள் துணியினால் சுற்றப்பெற்ற கட்டுக்களாகவும் (Bundles). தொகுதிகளாகவும் (Volumes) தஞ்சைச் சரசுவதி மகால் நூல்நிலையம், தமிழ்ப் பல்கலைக்கழகம். திருமலை 'திருப்பதி தேவஸ்தான அலுவலகம் போன்றவற்றில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை. திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர். கடலூர். மதுரை. இராமநாதபுரம் ஆகிய ஆவணக் காப்பகங்களில் உள்ள மோடி ஆவணங்களைத் தற்பொழுது பெருமுயற்சி செய்து அவற்றை ஒரே இடத்தில் பாதுகாத்து வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் அரசின் உதவியுடன் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 730 துணி மூட்டைகளில் உள்ள இந்த ஆவணக் கட்டுகளில் ஒவ்வொன்றிலும் குறைந்தது 100 ஆவணங்கள் வரை உள்ளன. இவற்றில் அக்காலச் சமுதாயம். பொருளாதாரம். பண்பாடு. அரசியல் வரலாறு அயல்நாட்டுத் தொடர்பு. நீதிமன்றங்கள். கோயிற்பணிகள். கல்விப்பணிகள் முதலான பலவற்றைக் காணமுடிகின்றன. இன்னும் வெளிவராமல் உள்ள வரலாற்றாய்வுக்குப் பயன் நல்கும் விதத்தில் இந்த ஆவணங்கள் திகழ்கின்றன.

இந்திய அலுவலக ஆவணங்கள்

இலண்டனிலுள்ள இந்திய அலுவலக நூல்நிலையத்தில் (India Office Library, London) பல்வேறு ஆவணங்கள் சேகரிக்கப்பெற்றுப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இவற்றுள் இந்திய நாட்டைச் சேர்ந்த ஆவணங்களும் அடங்கும்.

ஆர்ம் (Orme) என்பாரின் சுவடிகள். வெல்லெஸ்லி தாள் சுவடிகள் (Wellesley Papers). பிரெஞ்சு இந்திய ஆவணங்கள் (French Indies Records). தொழிற்சாலை ஆவணங்கள் (Factory Records), கடல்துறை ஆவணங்கள் (Marine Records), கிழக்கிந்தியத் தொகுப்புகள் (East Indies Series) முதலான பல்வேறு வகைப்பட்ட ஆவணங்கள் உள்துறைத் தொகுப்புகள்' (Home Miscellaneous Series) எனுந் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்குரிய விளக்க அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் அலுவலர் பெஞ்சமின் டாரின் (Benjamin Torin) என்பவர் (1779-1803) தஞ்சாவூர் மராத்திய அரசரிடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற ஓவியங்கள் மற்றும் இவரால் சேகரிக்கப்பெற்ற இருநூறுக்கும் மேற்பட்ட தஞ்சாவூர் மராத்தியபாணி ஓவியங்கள் இந்திய அலுவலக நூல்நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்த ஓவியங்களுக்கும் விரிவான வகையில் விளக்க அட்டவணைகள் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

9