உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்த ஆவணங்களில் இந்திய நாட்டில் 17, 18 ஆகிய நூற்றாண்டுகளில் நிகழ்ந்த பல்வேறு வகையான அரசியல் வரலாறு. சமுதாயநிலை. கல்விநிலை. மகளிர் நிலை. சதி தொடர்பான செய்திகள். நீதி நிர்வாகம். மக்கள் செய்த புரட்சி மற்றும் கலகங்கள். போர்கள் முதலானவற்றைக் காணமுடிகின்றன. தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் தஞ்சாவூர் மராத்தியர்கள் தொடர்பான பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை வெளிப்படுத்தும் வகையில் ஆவணங்கள் மிகுதியாக இருப்பதைக் காணமுடிகின்றன.

இலண்டனிலுள்ள இந்நூல்நிலையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த ஆவணங்களைத் தரவுகளாகக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நிலையில் அறிஞர்கள் உள்ளனர். தற்பொழுது இந்த ஆவணங்களின் நுண்படச்சுருள் (Microfilm) தமிழ்ப் பல்கலைக்கழக நூல்நிலையத்தில் உள்ளன. அனைத்து ஆவணங்களையும் உரிய முறையில் பதிப்பித்து வெளியிடுவது அறிஞர்களின் கடமையாகும். இவற்றை வெளியிடுவதனால் தமிழக வரலாற்றில் ஏன் இந்திய வரலாற்றில் கேள்விக் குறியாகவும் மறைந்தும் காணப்படுகின்ற இடைவெளிகளை நிரப்புவதற்கு இந்த ஆவணங்கள் பேருதவியாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

முத்திரை ஆவணங்கள்

நிலம். வீடு போன்றவற்றைப் பதிவு செய்வதற்குப் பதிவு அலுவலகத்தில் அதற்குரிய முத்திரைத் தாள்களில் பதிவு செய்தால்தான் அது நிலையானதாகவும் உறுதியானதாகவும் திகழும். இவ்வாறு பதிவு செய்வதற்கென்று சில நடைமுறைகள். விதிகள் உண்டு. அரசு முத்திரைத் தாளில் பொருள் (நிலம், வீடு போன்றவை) வைத்திருப்பவர் பெயர், முகவரி மற்றும் யார் பெயரில் பதிவு செய்யப்படுகின்றதோ அன்னாரின் பெயர். முகவரி போன்றவற்றை எழுதுதல் வேண்டும்; நிலம் அல்லது வீடு தொடர்பான முழு விவரத்தையும் அதில் எழுதுதல் வேண்டும். நிலம் அல்லது வீட்டின் மதிப்பு. இதை ஏற்றுக்கொண்ட தகவல் போன்றவற்றையும் எழுதுதல் வேண்டும் இறுதியில் நிலத்தை அல்லது வீட்டைக் கொடுத்தவர் ஒப்பம், பெற்றுக் கொண்டவர் ஒப்பம். சாட்சிக்காரர்களின் ஒப்பம். பதிவு செய்த அலுவலரின் ஒப்பம். பதிவு செய்த அலுவலக முத்திரை, நாள் போன்றவற்றைப் பதிவு செய்தல் வேண்டும். இது ஆவணம். பத்திரம். தஸ்தாவேஜ் என்றழைக்கப்படுகிறது.

இத்தகைய முத்திரை ஆவணங்கள் நில அளவுக்கேற்றபடி மதிப்புள்ள தாள்களில் எழுதப்படுகின்றன. கி. பி. 1860 வரையில் ஓலைகளில் எழுதப்பெற்ற ஆவணங்கள் தற்பொழுது கிடைக்கின்றன. இந்த ஓலைகளில் அரசு முத்திரைகள் இருப்பதையும் காணமுடிகின்றன. மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் உள்ள ஆவணக்களரியில் இந்த ஓலை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வந்ததை அறியமுடிகிறது. தமிழ்ப் பல்கலைக்கழக ஓலைச்சுவடித்துறையில் செங்கற்பட்டு புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட ஓலை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருவதுடன் அந்த ஆவணங்களைத் தரவுகளாகக் கொண்டு ஆய்வுப்பணியும் மேற்கெள்ளப்பட்டு வருகிறது.

அதேபோன்று அரிய கையெழுத்துச் சுவடித்துறையில் தாள்களில் எழுதப்பட்ட முத்திரை ஆவணங்கள் ஏறத்தாழ இருநூறுக்கும் மேற்பட்ட அளவில் காகிதச்சுவடி ஆய்வுகள்

10