உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சேகரிக்கப்பட்டுள்ளன. கி.பி. 1800 இலிருந்து எழுதப்பெற்ற ஆவணங்கள் இவற்றுள் அடங்கும்.

ய இத்தகைய முத்திரை ஆவணங்களில் அக்காலத்திய மக்களின் வாழ்க்கைநிலை, மொழி நடை, நிலத்தின் / சொத்தின் மதிப்பு. அளவைகள், குறியீடுகள். அக்காலத்தில் பதிவு செய்த முறை, எல்லைகள் முதலான பலவற்றைக் காணமுடிகின்றன.

முடிவுகள்

இலக்கியம், வரலாறு போன்ற ஆய்வுக்குப் பயன்படும் வகையில் சுவடிகளும், ஆவணங்களும் விளங்குகின்றன. ஒரு நாட்டைப்பற்றியும் அந்நாட்டு மக்களைப் பற்றியும் அறிவதற்கு இத்தகைய சுவடிகள் பெரிதும் பயன்படும். இலக்கிய நூல்கள். தொல்லியல் மற்றும் அகழ்வாராய்ச்சிகள். கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றவை எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் திகழ்கின்றனவோ அந்த அளவிற்குச் சுவடிகளும் ஆவணங்களும் ஆய்வுக்குத் தேவைப்படுகின்றன. தாள்களிலேயே நாட்குறிப்புகள், பயண நூல்கள், கடிதங்கள் போன்றவை எழுதப் பட்டிருப்பதையும் காணமுடிகின்றன. சுவடி நூல் நிலையங்களிலும், ஆவணக் காப்பகங்களிலும் இவை பாதுகாக்கப்பட்டு ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்டு. வருகின்றன. எனவே சுவடிகளும் ஆவணங்களும் ஆய்வுக்கு மிகவும் தேவை என்பதை இதுவரை ஆய்வு செய்ததன் மூலம் தெளிவுபடுத்தப்பட்டன.

ஒருசில ஆவணங்களின் பிரதிகள் சான்றுக்கு இவண் தரப்படுகின்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

11