உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்து மதப் பிரிவுகளில் ஆசாரியர்கள் மதபோதனை செய்வதற்காகவும் மத அறிவைப் பரப்புவதற்காகவும் ஒரு நல்ல ஆசிரியப் பரம்பரையை உண்டாக்குவதற் காகவும் மடங்களை நிறுவினார்கள். திருப்பனந்தாள் மடம். தருமபுரம் மடம் முதலானவை சென்னை மாநிலத்தில் முக்கியமானவை. மடாதிபதிகள் அரசர்களுடைய அன்புக்கும் மக்களுடைய மதிப்புக்கும் பாத்திரமானவர்களாக. அறிவும். ஒழுக்கமும் உடையவர்களாக இருந்தபடியாலும் மக்களுக்குப் பலவித நன்மைகள் செய்து வந்தபடியாலும் அரசர்களும். செல்வர்களும் ஏராளமான சொத்துக்களை நிபந்தங்களாகக் கொடுத்ததோடு பல கோயில்களை நடத்தும் பொறுப்பையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். இத்தகைய அறக்கட்டளைகளைத் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடம் ஏராளமாகச் செய்து வந்துள்ளமை இங்குக் குறிப்பிடத்தக்கது.

திருப்பனந்தாள் : ஸ்ரீ காசி மடம்

ஆதி குமர குருபர சுவாமிகளின் வழி வந்த ஸ்ரீ காசிவாசி தில்லை நாயக சுவாமிகள் காசிக் குமாரசாமி மடத்தில் கி. பி. 1756 வரையில் இருந்தார். அவர்கள் திருப்பனந்தாளில் கி. பி. 1720இல் ஒருமடத்தை நிறுவினார்கள். திருப்பனந்தாள் மடம் காசிமடத்தின் தொடர்புடையதாதலின் அதற்குக் காசிமடம் என்னும் பெயர் வழங்கலாயிற்று. ஸ்ரீ தில்லை நாயக சுவாமிகள் திருப்பனந்தாள் ஸ்ரீ காசி மடத்தின் ஆறாவது தலைவராவர். (முதல் ஐவரும் காசிக் குமார சுவாமி மடத்தில் தலைவராக இருந்தனர். அம்மடத்தின் தொடர்பால் தில்லை நாயக சுவாமிகள் ஆறாமவராக அழைக்கப்படுகிறார்) இவர்கள் காலத்தும். இவர்களை அடுத்து விளங்கிய சடையப்பத் தம்பிரான் காலத்தும், இவர்களை அடுத்து விளங்கிய குமார சுவாமிகள் காலத்தும். 12ஆம் அதிபராக விளங்கிய சொக்கலிங்கத் தம்பிரான் காலத்தும் பிற்காலத்தும் (1900-1941) விளங்கிய காகிதச் சுவடிகளில் உள்ள தர்ம சாசனங்களின் வழி ஆய்வு மேற் கொள்ளப்படுகிறது. இவர்கள் காலத்து விளங்கிய தர்ம சாசனங்கள் பலவும் பதிவு செய்யப்பட்டு விட்டதால் காகிதங்களில் உள்ளவை மட்டும் இங்குக் குறிப்பிடப்படுகிறது.

அன்னதானம்

மனிதர்களுக்கு உண்ண உணவும். உடுக்க உடையும் இருக்க இடமும் அடிப்படையும் அவசியமாகும். இவற்றுள் உணவு மிக இன்றியமையாத ஒன்றாகும். உண்டி முதற்றே உணவின் பிண்டம்.

என்று புறநானூறும்

"அறமெனப்படுவது யாதெனக் கேட்பின் மறவாது இதுகேள் : மன்னுயிர்க் கெல்லாம் உண்டியும் உடையும் உறையுளும் அல்லது கண்டதில்"

'மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே'

எனும் தொடர்களால் மணிமேகலையும் மன்னுயிர்களுக்கு உணவு கொடுத்தலைச் சிறந்த அறமாகக் குறிப்பிடுகின்றன. உணவின் தேவையை அறிந்து ஆபுத்திரன் காகிதச்சுவடி ஆய்வுகள்

129