உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அமுத சுரபியின் துணையால் உயிர்களின் பசியாற்றினான் என்றும் மணிமேகலை குறிப்பிடுகிறது.

'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்று திருமூலர் கூறுகிறார். உயிர் நிலை பேற்றுக்கு உணவால் உடம்பை வளர்த்தலை அவர் உணர்த்துகிறார். இவற்றை நன்கறிந்த நம் முன்னோர்கள் பசிப்பிணி மருத்துவர்களாகத் திகழ்ந்து அன்னதானமாம் நல்லறத்தைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இராஜாக்களும். ஜமீன்தார்களும். மக்களும் அன்னதானம் நடத்துவதற்கும். கோயில் வழிபாட்டிற்கும். சத்திரம் அமைப்பதற்கும் கிராமங்களைத் தானமாகக் கொடுத்துள்ளனர். அவைபற்றிய குறிப்புக்களை அவர்களே எழுதிச் சுவாமிகளிடம் ஒப்படைத்துப் பரிபாலிக்கும்படிச் செய்துள்ளனர். அக்குறிப்புக்களின் நகல் பின்வருமாறு அமைந்துள்ளது.

தில்லை நாயக சுவாமிகள் (1720-1756)

ஆந்திர மாநிலம் பல்லி போராம் எனுமிடத்தில் வசித்த ராஜஸ்ரீ வெங்கடாசலரெட்டி என்பார் தமக்குச் சொந்தமான திருச்சிராப்பள்ளி துறையூர் சீமையில் அபினிமங்கலம் என்ற கிராமத்தைக் காசியில் நடக்கும் அன்னதானத்திற்கும். இராமேஸ்வரத்தில் நடக்கும் அன்னதானத்திற்கும் கொடுத்துள்ளார். அக்கிராமத்தில் உண்டான நஞ்சை. புஞ்சை. மாவட, மரவட, நிதி, நிஷேப ஜலதருபாஷாண, அக்ஷன் ஆகாமி சிதி சாதியங்கள் என்கிற அஷ்டயோக தேஜஸ்வாம்மியங்கள் முதலான. அனைத்தும் கொண்டு தர்ம பரிபாலனம் செய்ய வேண்டும் என்று தில்லை நாயக சுவாமிகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார். இஃது 1744ஆம் ஆண்டு எழுதப்பட்ட சாசனமாகும்.

திருலோக்கியில் (திருப்பனந்தாளுக்கு அருகில் உள்ள கிராமம்) வாழ்ந்த சாந்தப்பிள்ளை. கவித்தியாப் பிள்ளை. சிதம்பரம் பிள்ளை. சிவ தாரண்யம் பிள்ளை. வீரப்ப முதலியார் முதலானவர்கள் தங்களுக்குச் சொந்தமான விளக்கண்ணச் சேரி எனுமிடத்தில். 350 குழி நஞ்சை நிலத்தைக் காசி மடத்து மகேசுவர பூசைக்குத் தருமசாசனம் செய்து கொடுத்துள்ளார்கள். இதனைச் சந்திராதி வரைக்கும் பயிர் செய்து சர்வமானியமாக அனுபவித்துக் கொள்ளவும். இதற்குரிய இறைவரியைத் தாங்களே கட்டிக் கொள்வதாகவும் சம்மதித்துத் தில்லை நாயக சுவாமிகளுக்கு எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

சைவ அடியார்களுக்கும். சைவ மரபினர்களுக்கும் உணவளிப்பது மகேசுவர பூசையாகும். இத்தகைய பூசை வடநாட்டிலும், தென்னாட்டின் பல பகுதிகளிலும் இன்றும் சிறப்புற நடந்து வருகின்றது.

குமர குருபர சுவாமிகள் (1756-1790)

இவர்கள் காலத்தில் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்த குமார வெங்கடப்பானு பட்டணக்காரு என்பார் சுவாமிகளிடத்து நிபந்தனைக் காகிதம் ஒன்றை எழுதிக் கொடுத்துள்ளார். அதில் காசியில் தங்களுடைய இனத்தாருக்குரிய அன்னதான சத்திரத்திற்குக் காளஹஸ்திச் சீமையில் ஸ்ரீமகான் காளி தேவி புத்தூரில் உள்ள

130

காகிதச்சுவடி ஆய்வுகள்