உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




விசுவநாதபுரம் கிராமத்தை நிவந்தமாகக் கொடுத்துள்ளார்கள். ஆகையால் இந்த வருடம் முதல் வருடம் ஒன்றுக்கு சிங்கம் (அளவுப் பெயர்) 12 புட்டி. (நெல்வகை) நெல்லுக்கு உத்தரவு கொடுப்பித்து அவ்விதமாய்ச் சத்திரத்தில் உள்ள கோயிலுக்குத் தானியம் கொடுத்து வரவேண்டியது என்று சுவடி குறிப்பிடுகிறது.

சடையப்பத் தம்பிரான் (1798 - 1896)

இவர்கள் காலத்தில் சென்னைப் பட்டணத்தில் இருக்கும் வைசிய குலத்தைச் சார்ந்த குமரப்ப செட்டியாருடைய குமாரராகிய கரிய கிருஷ்ணம்ம செட்டியார் தருமசாசனம் செய்து கொடுத்துள்ளார்கள். அதன்படி தர்மராஜஸ்ரீ சடையப்பத் தம்பிரான் அவர்கள் அன்னதான தர்மசாசனம் எழுதிக் கொடுத்துள்ளார்கள். அஃதாவது பரத கண்டத்தில் காசித் தலத்தில் கங்கா தீரத்தில் தம்முடைய தருமமாக நித்தியம் பிரதி தினமும் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னதானமும். தனுஷ்கோடி சகிதமான இராமேசுவரத் தலத்தில் தங்களுடைய தருமமாக நித்தியம் பிரதி தினமும் பன்னிரண்டு பிராமணர்களுக்கு அன்னதானமும் இந்த இரண்டு இடத்துத் தருமங்கள் நடப்பிக்கிறதற்காகவும். ஸ்ரீகாசியில் தம்முடைய பேருக்குச் சத்திரம் கட்டவும் தாங்கள் நம்மிடத்தில் ரொக்கம் கொடுத்த பூவிராகன் (எந்நாட்டிற்கு உரியதோ அந்நாட்டுப் பொன்னைக் குறிக்கும்) 3450இல் ஸ்ரீகாசி க்ஷேத்திரத்தில் சத்திரம் கட்டச் செலவு பூவிராகன் 400 போக நீக்கி பூவிராகன் 3050உம் நம்முடைய ஆதினத்தில் சேர்த்துக் கொண்டதினாலே இந்தப் பூவிராகன் 3050க்கும் வரப்பட்ட ஆதாய திரவியத்தில் ஒரு வேளை க்ஷாம காலங்களாயிருந்தாலும் மேலே எழுதியிருக்கிறபடிக்கு. இரண்டு இடத்திலும் நித்தியம் பிரதி தினமும் 24. பிராமணாளுக்கும் திருப்தியாய் அன்னதானம் நடப்பிவித்து. தம்முடைய ஜன்ம நட்சத்திரமாகிய பூர்வ பல்குனி நஷத்திர ஸிம்ம ராசியில் ஜெனனமான தம்முடைய நாமதேயத்திற்கு ஆசிர்வாதமுமடைந்து வரும்படியாகவும். நடப்பித்துக் கொண்டு வருவோமாகவும் தங்களுக்குப் பிற்காலம் தங்கள் வம்சத்தார்கள் மற்ற

வராமல்

தொருவருக்கும் இந்த முதல் பூவராகன் 3050க்கும் இந்த தருமத்திற்கும் பாத்தியமில்லாமல் நாமே நடப்பித்துக் கொண்டு நம்மிடத்தில் தாங்கள் வைத்திருக்கும் முதலிலேயாவது. அதில் வரப்பட்ட ஆதாயத்திரவியத்திலேயாவது ஒருவர் அபகரிக்க நாங்கள் சம்மதித்திருந்தாலும். பிராமணத் துரோகம் வந்து சம்பவிக்குமாகையால் அப்படிக்கெல்லாம் தங்கள் அன்னதான தருமமும் சத்திரோத்திராபிவிர்த்தியாகும்படியாய் நம்முடைய சிஷ்ய பரம்பரையாய் தங்களுடைய தருமத்தை சந்திரார்க்கமாய் பரிபாலனம் பண்ணிக் கொண்டு நடப்பித்துக் கொண்டு வரும்படியாக நம்முடைய மனப் பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்டு உடன்படிக்கை என்று சடையப்பத் தம்பிரான் எழுதிக் கொடுத்துள்ளார்கள். இஃது 1813இல் எழுதப்பட்டதாகும். இத்தருமமும் அன்னதானத்தையே குறிப்பிடுகிறது.

அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள்யாவும் பெயர் விளங்கியொளிர நிறுத்தல்"

எனும் பாரதியின் வாக்கிற்கிணங்கத் தருமங்களைச் செய்வதைக் காட்டிலும் அதனைப் பின்னரும் பெயர் விளங்கி நிற்குமாறு நடத்திப் புகழ் பெறுவதே சாலச் சிறந்தது காகிதச்சுவடி ஆய்வுகள்

131