உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




என்பதை உணர்ந்த ஸ்ரீகாசிமடம் இத்தருமங்களைச் செல்வனே நடத்தி வருவது இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

சொக்கலிங்கத் தம்பிரான் (1841 - 1852)

இவர்கள் காலத்தில் கண்டி சேஷமனாய்டு ஸ்ரீகாசித் தலத்தில் இருக்கும் ஸ்ரீகாளஹாஷ்தி தர்ம சத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காள ஹாஸ்திபதி ஈச்வர சுவாமிக்கு நித்திய நைவேத்திய தீபாராதனை முதலான தர்மங்களுக்குச் சிய்யவரம் கிராமத்திலிருந்து அரண்மனைக்குக் கொடுக்க வேண்டிய ரூ. 56ம் மேலை வகையறாவுக்கு இது வரையிலும் உத்தரவு பிறந்ததால் அதன்படி கணக்கு பரிஷ்காரம் பண்ணிக் கொண்டு எனக்கு இதன்படி செலுத்துக் கொள்ளுகிறோமென்று தர்மம் நடப்பித்துக் கொண்டிருக்கும் சொக்கலிங்க தம்பிரான் அவர்களுக்கு மனு செய்வித்துக் கொண்டுள்ளோம் என்று எழுதிக் கொடுத்துள்ளார்கள்.

குளம் வெட்டுதல் (1874-1940, 1941)

ஸ்ரீ காசிமடம் மேற்கொண்ட அறச்செயல்களில் நீர் நிலைகளை அமைத்தலும் ஒன்றாகும். குளம் தொட்டு வளம் பெருக்கி வந்தமை இதனால் தெரிகிறது. இவ்வகையில் 1874ஆம் ஆண்டு 14ஆவது பட்டம் காசிவாசி இராமலிங்க சுவாமிகள் காலத்தில் காசிமடத்தைச் சார்ந்த பொய்கைக் குளம் வெட்டப்பட்டு நான்கு புறமும் சிமெண்ட் தளமும், கைப்பிடிச் சுவர், படித்துறை முதலியவைகளும் கட்டப்பட்டன. இப்பணியைப் பின்வந்த சுவாமிகளான காசிவாசி சோம சுந்தர சுவாமிகளும். சாமி நாத சுவாமிகளும் செய்துள்ளனர். குளக்கரைகளைப் பழுது பார்த்துக் கட்டியதுடன் குளத்தின் நடுவில் நீராழி மண்டபமும் அமைத்துள்ளனர்.

மேலும் 1937இல் சாமிநாத சுவாமிகளின் உத்தரவுப்படி வீராக்கன் கிராமம் ஸ்ரீமாரியம்மன் கோயில் எதிரடிகுளமும் 1940இல் திருப்பனந்தாள் வீரியம்மன் கோயில் எதிரடி குளமும். 1941இல் திருலோக்கி கிராமம் பெருமாள் கோயில் எதிரடி குளமும் வெட்டப்பட்டிருக்கின்றன. இதனால் அன்னதானத்தோடு குளம் வெட்டி நீர் நிலை பெருக்கிய அறமும் தெரிகிறது.

அறுசுவை உண்டி வழங்கல் (1934)

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம் சைவ அடியார்களுக்கும். சைவ மரபினர்களுக்கும் உணவு அளித்து வருவது யாவரும் அறிந்த ஒன்றாகும். இதனை மாகேசுவர பூசை என்று அழைப்பர். இஃது இன்றும் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது இத்தகைய மாகேசுவர பூசை ஆதி குமரகுருபர சுவாமிகள் சிவப்பேறு பெற்ற நாளாகிய வைகாசித் திங்கள் அமரபக்ஷ திருதியையில் மிகச் சிறப்பாகக் கொண்டாப்பெறும். அன்று ஆயிரக்கணக்கானவர்கள் உணவருந்தி மகிழ்வர். அவ்வுணவு அறுசுவையுடன் வழங்கப்படும். அத்தகைய அறுசுவை உணவை நூறு பேருக்குத் தயாரிக்க ஆகும் உணவுப் பொருள்களைக் குறிப்பிட்டு (மளிகை சாமான் காய்கறி வகையறாக்கள்) 'நூறு பேர் அறுசுவை சமையல் திட்டம்' என்பதை 29 - 08 -1934இல் ஏற்படுத்தி அதனைக் காசி மடத்தில் அடியார்கள் உணவருந்தும் இடத்திலேயே (பந்தி கட்டு) கல்வெட்டில் வெட்டி வைத்துள்ளார்கள். காகிதச்சுவடி ஆய்வுகள்

132