உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இதனால் சாப்பிடும் எண்ணிக்கைக்குத்தகப் பொருள்களை வாங்குவதற்கு எளிமையுடையதாய் இருப்பதுடன் அடியார்களை அறுசுவை அமுதூட்டி மகிழ்வித்த அறச்செயலும் புலப்படுகிறது.

காகிதச் சுவடியின் அமைப்பு முறை

காகிதச் சுவடிகளில் சில இராணி முத்திரை பதிக்கப்பட்ட பத்திரங்களில் அமைந்துள்ளன. மேலும் சில காகிதத்தின் ஓரத்தில் 'யானை' முத்திரை காணப்படுகிறது.

காகிதச் சுவடியின் தொடக்கம் ஆண்டாகவோ அல்லது மரியாதைக்குரிய சொல்லாகவோ அமைந்து தொடங்குகிறது. கொடுப்பவர் கையெழுத்தும், சாட்சிக் கையெழுத்துக்களும், பெறுபவர் கையெழுத்தும் காகிதத்தின் அடிப்பாகத்தில் அமைந்துள்ளன. தெலுங்கும் தமிழும் கலந்த நடையமைப்பும். தெலுங்கு உருது மொழி எழுத்துக்களும் கொண்டு சுவடிகள் காணப்படுகின்றன. கல்வெட்டினைப் போன்று தர்மங்களைப் பாதுகாக்கும் முறையில் 'சூரிய சந்திராதித்த வரைக்கும்' என்று குறிப்பிடுகின்ற முறை காணப்படுகிறது. தர்மத்தை அபகரிக்க நினைத்தால் ஏற்படும் பாவமும் கூறப்படுகின்றது. காகிதச் சுவடியின் அமைப்பு ஒன்றும் இங்கு எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

இதுகாறும், காகிதச் சுவடியில் உள்ள தர்ம சாசனங்கள் பற்றியும், காகிதச் சுவடி அமைப்பும் பற்றியும் கண்டோம். இதுபோல் மேலும் ஆய்வு செய்தால் பல செய்திகளைக் காணமுடியும்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

133