உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரங்க மு. முருகையன் விரிவுரையாளர்

தமிழியல் துறை

புதுவைப் பல்கலைக்கழகம்

இரண்டாம் வீரா நாயக்கர் நாட்குறிப்பு

வரலாற்றின் சிறப்புக்களை அறியும் ஆவணங்களாக அவ்வக்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள். ஓலைச் சுவடிகள், நாட்குறிப்புகள் போன்றன துணை நிற்கின்றன. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரி வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு நாட்குறிப்பு மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றது. கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் வரலாறும் மக்கள நிலையும் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பால் நன்கு விளக்கமுறுகின்றனது. இதைப் போலவே தமிழக வரலாற்றிற்குச் சிறந்த ஆவணமாக விளங்குவது இரண்டாம் வீரா நாயக்கர் நாட்குறிப்பாகும். இவ் ஆவணமும் கி. பி. 1778க்கும் 1792க்கும் இடையிலான வரலாற்றை விளக்குகின்றது.

புதுவையில் 1840 - 1850இல் பணிபுரிந்த எதுவர் அரியேல் (Edouard Ariel) என்பவர் தமிழ் மற்றும் தமிழரின் பண்பாட்டு வரலாற்றில் கொண்ட ஈடுபாட்டின் காரணமாகத் தொகுத்து வைக்கப்பட்ட அரிய கையேட்டுப் பிரதிகளின் தொகுப்பிலிருந்து இந்நாட்குறிப்பு. பிரான்சின் தலைமை நூலகத்திலிருந்து பெறப்பட்டது.

"MS. IND, 143 என்ற எண்ணுடைய கோப்பினுள்ளே வேறு பல குறிப்புகளோடு எதுவார் அரியேலால் 'வீரா நாயக்கர் தின சரிதை' என்ற தலைப்பு குறிக்கப்பட்டு, மூலப் பிரதியுடன் ஒப்பிட்டுப் பார்த்தபின் கையொப்பமிட்டு வைக்கப் பட்டிருக்கின்றது.சுமார் 320 பக்கங்கள் கொண்ட இத் சரிதைப்படி முழுவதையும் நுணுகியாராய்ந்த பின், வாசிப்பவர்களும் 1778 1792க்கான வரலாற்றை ஆராய்ச்சி செய்வோர்களும் நல்ல பயனடையும் படியாக இதை நாம் நான்கு அத்தியாயங்களாகப் பகுத்துப் பதிப்பித்திருக்கின்றோம்

-

1

எனும் பதிப்பாளர் ஓர்.சே.மா. கோபால் கிருஷ்ணன் கருத்தின் வாயிலாக இந்நாட்

1. ஓர்.சே மா கோபால கிருஷ்ணன் இரண்டாம் வீரா நாயக்கர் நாட்குறிப்பு (1778 - 1792), ப. 4,

காகிதச்சுவடி ஆய்வுகள்

135