உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




குறிப்பு பிரான்சிலிருந்து பதிப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

வீரா நாயக்கர் வரலாறு

புதுவையில் பிரஞ்சுக்காரர்களின் ஆட்சியின் போது காவல் துறையின் உயர்பதவிக்கு அடுத்தபடியாக இருந்த பதவி 'இரண்டாம் நயினார்' என்பதாகும். இரண்டாம் வீரா நாயக்கரின் கொள்ளுத்தாத்தாவான பெருமாள் நாயக்கர். இவரை அடுத்து வீரா நாயக்கர், பின்பு இவர்தம் பிள்ளையான ராஜகோபால் நாயக்கர் எனப் பரம்பரையாக இரண்டாம் நயினார்' பதவியில் பணியாற்றினர். இராஜகோபால் நாயக்கர் பிரஞ்சுக்காரர்களிடம் 38 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். இவர் திறமையோடு பிரஞ்சு கவர்னர் 'கோதஹே' லெரி, லாசு போன்றோரின் கீழ்ப் பணி புரிந்து சிறப்புற்றார். இவருடைய புதல்வரில் ஒருவரே வீரா நாயக்கர் ஆவார். தன்னுடைய தாத்தாவின் பெயரைக் கொண்ட வீரா நாயக்கர் தம் காலத்தில் புதுவையிலும் புதுவையைச் சார்ந்த இடங்களிலும் தமிழ் நாட்டிலும். தென்னிந்தியாவிலும் நடந்த சம்பவங்களைத் தனது தினசரிக் குறிப்பில் எழுதி வரலாற்று நாயகராகத் திகழ்கின்றார்.

புதுவை உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் போர்ச்சுகீசியர், ஓலந்துக்காரர். டச்சுக்காரர் ஆங்கிலேயர், பிரஞ்சுக்காரர் எனப் பல தரப்பட்ட மக்கள் வணிக மையங்களை அமைத்து அதன் வாயிலாக இம்மக்களிடையே அதிகாரங்களை மெல்லச் செலுத்தினர். அரசியல் போக்காலும் ஆட்சியதிகார நாடு பிடிச் சண்டைகளாலும் தமிழகம் அல்லலுற்ற காலத்தே ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் இங்கிருந்த மன்னர்களையும் மக்களையும் பயன்படுத்திக் கொண்டு எத்தகு முறையில் போரிட்டனர் என்பதை இந்நாட்குறிப்பு விளக்குகின்றது

மேற்கண்ட சூழலில் புதுவையும் புதுவையைச் சார்ந்த பகுதிகளும் உங்கிலேயர் வசமும், பிரஞசுக்காரர் வசமும் மாறி மாறி இருந்துள்ளதை இந்நாட்குறிப்பால் உணர முடிகின்றது

தினசரிதை குறிப்பிடும் புதுவை

புதுச்சேரியின் அன்றைய வரலாற்றை நோக்கின் நிகழ்ந்த சண்டைகள் 1. ங்கிலேயர்களுக்கும் 2. திப்புவினுடைய அதிகாரத்திற்குட்பட்டிருந்தவர் களுக்குமிடையே நடந்தேறியது.

ஆங்கிலேயருடைய தாக்குதல்களில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளப் பிரஞ்சுக்காரர்கள் நவாபு முகமதலிகான். அயிதரலிகான் போன்றோரிடம் உதவி கேட்க அவ்உதவி சரியான நேரத்திற்குக் கிடைக்காமல் பிரஞ்சுக்காரர்கள் தங்களுடைய கோட்டைகளை வலுப்படுத்திக் கொண்டனர். இச்செய்திகள் பின்வருமாறு நாட்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

136

"ழெனேரால் முசியேபெலுக் கொப்பவர்கள் முசியே துலாக் என்றிந்தப் பட்டணத்திலே பெரிய இஞ்சினீராயிருந்தவரை யழைத்துப் புதுவை நகரில் இருந்தவர்களை யெல்லாம் சேர்க்கச் சொல்லி கட்டளையிட்டு முலியேத்து மா 7ந் தேதி தானே

காகிதச்சுவடி ஆய்வுகள்