உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கோட்டை வேலை செய்யத் தக்கதாக உத்தாரம் கொடுத்தார் "2

மேலும் பிரஞ்சுக்காரர்களின் வேண்டுகோளுக்கேற்ப அயிதரலிகான் அனுப்பிய குதிரைகளும் உரிய காலத்திற்குள் வந்து சேரவில்லை.

"அயிதரலிகான், மராட்டியர் நிசாமல்லி கான் பசாலத்து சங்குயிவர்களை தமக்கொத்தாசை செய்யச் சொல்லிக் கேட்டெழுதிக் கொண்டதுக்கு மராட்டியர் மறுமொழியொன்று எழுதாமற் போனார்கள். அயிதரல்லிகானுடைய மறுமொழிப் பிறகாரம் மேற்படி குமுக்குக்கு குதிரையாறாயிரமும் அவு மாசத்தில் வந்து சேர வேண்டியதும் வராமற் போய் விட்டது. மைற்றவர்களை யொத்தாசை செய்யச் சொல்லிக் கேட்டுக் கொண்டதும் காரியமில்லாமற்றானே போய் விட்டது"

எனும் குறிப்பால் அறியமுடிகிறது.

  1. 3

பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை ஆண்டபோது ஆங்கிலேயர்களின் கப்பல் புதுவையைக் கைப்பற்றும் நோக்கோடு வந்தது. அப்போது நிர்வாகப் பொறுப்பிலிருந்த முசியே பெலுக்கொம்பவர்கள்.

"கப்பலுக்குத் தலைவனாயிருந்த முசியே துறொன் ழொலி என்பவனுக்கிட்டக் கட்டளையாவது : எதிரிகளுக்கெதிரே போகச் சொல்லியும் அவர்களுங்கள். பேரில் முதற்கை யெடுத்தாலொழிய நீங்களவர்களை எதிர்க்கத் தேவையில்லை யென்று மவர்களுங்கள் பேரில் கையெடாமல் சும்மாய் புதுச்சேரி துறைப்பிடிக்க வந்தாலவர்களை யப்பிறம் போகச் சொல்லி முதலறிவிக்க வேண்டியது. நல்ல தனத்துடனவர்களைப் பிறம் போகாவிட்டால் சண்டை துவக்கிக் கொள்ளச் சொல்லியும் அதன் முன் சண்டை துவக்கத் தேவையில்லை யென்றும் கப்பல் காரருக்குக் கட்டளை பிறப்பித்தான்"4

எனும் செய்தியால் அக்காலத்தில் முறையான அறிவிப்பிற்குப் பிறகே சண்டை தொடங்கும் வழக்கம் இருந்ததை உணர முடிகிறது. மேலும் நாட்குறிப்பில் போரில் இறந்துபட்டவர்களின் எண்ணிக்கை, பயன்படுத்தப்பட்ட பீரங்கிகளின் எண்ணிக்கை, காயம்பட்டவர்களின் எண்ணிக்கையென அனைத்துத் தகவல்களையும் நாட்குறிப்புத் தெளிவாகக் கூறுகிறது.

ஆங்கிலேயர்களுக்கும் பிரஞ்சுக்காரர்களுக்கும் நடந்த முதல் சண்டையில்

பிரஞ்சியருக்கு

ஆங்கிலேயருக்கு

கப்பல்கள்

பீரங்கிகள்

பரிவாரங்கள்

5

168

1038

5

150

1010

ஓர். சே. மா கோபால கிருஷ்ணன், மு. கா. நூல், ப. 4

3

மேலது ப. 5.

4

மேலது.ப 13

காகிதச்சுவடி ஆய்வுகள்

137