உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இறந்து போனவர்கள் எண்ணிக்கை

ஆங்கிலேயருக்கு பிரஞ்சியருக்கு

-11

காயம் 51

30 காயம் 3

இச்சண்டையில் முதல் வெற்றி பிரஞ்சுக்காரர்களுக்கே என்பதை நாட்குறிப்பால் அறிய முடிகின்றது அடிக்கடி நிகழ்ந்த போர்களில் புதுச்சேரி அல்லல் பட்டுக் கிடந்தது என்பதை நாட்குறிப்பின் வழி உணரமுடிகின்றது.

நாட்குறிப்பில் - தண்டனை

அரசுக்கோ அல்லது சமுதாயத்திற்கோ புறம்பான முறையில் நடப்பவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கப்பட்டது. சாராயம் விற்றவர்களுக்கு எத்தகு தண்டனை முறை வழங்கப்பட்டிருந்தது என்பதை.

இற்றை நாள் வெகுகாலமாய் பெரிய கடையில் சாராயம் வித்துக் கொண்டிருந்த ஒரு யிங்கிலீசுக்காரனையும் பிராம்சுக்காறருடைய சொல்தாதாகிய அக்கித்தேன் ரெழிமாமுடைய சொல்தா தொருவனையும் கயற்றினாலே கட்டி இருவருடைய கழுத்துகளிலும் காகிதமெழுதிக் கட்டி மேற்படியாரைச் சுத்தி சிப்பாய்களை காவல் போட்டு கொம்பு தமுக்கு முதலான வாடம்பரத்துடன் நடுப் பிளாசிலே கொண்டு வந்து மேற்படியாருடைய நெத்திகளிலும் முதுகிலும் முத்திரைப் போட்டு வூரைச் சுத்தி திருப்பி பிறசித்தமான பின் மறுபடியும் சிறைசாலையில் வைத்தார்கள் 5

எனச் சாராயம் விற்றவருக்கான தண்டனை முறையைக் கூறுகின்றது.

பிரஞ்சுப் படையில் பணியாற்றியவர்கள் ஆங்கிலேயர்களுக்குப் பயந்து புதுச்சேரியை விட்டு வேறு பகுதிகளுக்கு ஓடுவதும் ஆங்கிலேயர்களுடைய கமபெனிகளில் சேர்ந்து கொள்வதும் வழக்கமாய் இருந்தது இப்படி ஓடிப் போனவர்களைத் தேடிப் பிடித்து வந்து அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

"இந்த நாள் சாயங்காலம் சொல் தாது ராணுவத்தார்களை யெல்லாம் பிளாசிலே வரிசை வைத்து மேற் சொல்லப்பட்டவிரண்டு சொல் தாதுகளையும் சிறைச் சாலையிலிருந்து திட்டு வந்து மேற் சொல்லப்பட்ட விரண்டு வரிசைக்கு நடுவே விட்டு தலையின் மயிரை மொட்டையடித்து செய்ய வேண்டிய லவமான மெல்லாஞ் செய்தான பின் பீரங்கி குண்டு மாட்டி வைத்திருந்த சங்கிலியைக் கழுத்திலே மாட்டி வரிசைக்கு மத்தியிலே திருப்பி பங்கப்படுத்திய பின் கால் விலங்கு போட்டு (Galere) என்னும் ஆக்கினைக் குள்ளாக்கினார்கள்"6

5 ஓர் சே மா கோபால கிருஷ்ணன மு. கா. நூல் ப. 109

6.

138

மேலது. ப 132

காகிதச்சுவடி ஆய்வுகள்