உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தூக்குத் தண்டனை

இவையன்றிச் சிறையிலடைத்தவர்களைத் திரும்பவும் அழைத்து வந்து தூக்கு மரத்தண்டைத் தூக்கச் செய்தும் அப்போது அவர்களுடைய துணிகளைத் தோட்டிகள் பறித்துக் கொண்டார்கள்.

'பிற்பாடு ஏணியின் பேரிலேற்றி கழுத்திலே கயிற்றை மாட்டித் தூக்கிலிட்டார்கள் பின்னுமரை மணிக்கெல்லாம் மற்றொருவனையு மந்தப் பிறகாரந் தூக்கிலிட்டார்கள்"?

வலங்கை

-

இடங்கைப் பூசல்கள்

தமிழ்ச் சமூக வரலாற்றில் இறுகிப்போன சாதிய அமைப்பின் வெளிப்பாடாக விளங்குவது இவ்வலங்கை இடங்கைப் பூசல்கள் ஆகும். சாதிய ஆய்வாளர்களும், வரலாற்றாசிரியர்களும் வலங்கைச் சாதியினர் 98 என்றும் இடங்கைச் சாதியினர் 98 என்றும் குறிப்பிடுகின்றனர். வலங்கையருக்கும் இடங்கையருக்கும் வாழ்க்கையில் சில உரிமைகளைப் பயன்படுத்துவதிலும், சமூக ஆளுமையில் இன்னார் இந்தப் பழக்கவழக்கங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று சமூகச் சட்டங்களைத் தங்களுக்குள்ளே கொண்டதாலும் இவ்விரு தரப்பினரிடையே. மேற்கண்ட முறைகளைக் கடைப்பிடிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டபோது அங்குப் பூசல்கள் எழுந்துள்ளன.

ஆனந்தரங்கர் நாட்குறிப்பைப் போலவே வீரா நாயக்கர் நாட்குறிப்பும் வலங்கை இடங்கைப் பூசல்களைப் பதிவு செய்துள்ளன. இப்பூசல்கள் புதுவையில் உள்ள வரதராசப் பெருமாள் கோயிலில் நடைபெறும்

1. வைகுண்ட ஏகாதசி இரத உற்சவம் தொடர்பாகவும்

2. செட்டிமகன் ஒருவன் வழக்கத்திற்கு மாறாகக் குடை பிடித்து வந்ததாலும்

3. இறந்தவருடைய பிணத்தை எடுத்துச் செல்லுதல் தொடர்பாகவும்

4. வலங்கையர் வீதி வழியாக இடங்கையர் செல்லும் போதும். இடங்கையர் வீதி வழியாக வலங்கையர் செல்லும் போதும் இத்தகு பூசல்கள் எழுந்தன.

என்பதை நாட்குறிப்பு பல இடங்களில் சுட்டுகின்றது.

"இற்றை நாள் வைகுண்ட யேகா தெசியான படியினாலே வரதராசப் பெருமாளுக்கு றத உற்சவஞ் செய்விக்க வேணுமென்று யோசித்துப் பத்து நாளைக்கு முன்னமேதானே மகாநாடு கூடி விபகாரம் பேசியு மொன்று மொவ்வாமற் போகவே வலங்கையாரும் இடங்கையாரும் கூடிக் கொண்டு முசியேதெ கொசிஞி யவர்களிடத்தில் முறையிட்டுக் கொண்டவிடத்தில் இவருடைய ஞாயத்தையும் கேட்டு இடங்கையாருக்குத் தேரோட வெதினாலே உத்தாரம் கொடுக்கக் கூடாதென்று விளக்கஞ்

7

ஓர் சே.மா.கோபால கிருஷ்ணன். மு. கா. நூல். ப. 133.

காகிதச்சுவடி ஆய்வுகள்

139