உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செய்கீறீர்களென்று வலங்கையாரைக் கேட்டதுக்கு இவர்கள் சொன்னது : விடங்கையார் ரெப்போதும் நடவாத காரியத்தை நவமாயுண்டு செய்து கொள்ள பிரேத்தினம் செய்கிற படியினாலே யது கூடாத காரியமாய் இருக்கிறதென்று சொன்னதின் பேரில் ஒருவருக்கொருவர் தீராத சங்கதிகளாய் பேசி வளர்த்திக் கொண்டிருந்த படியினாலே துரைக்கு மனசிலே யாயாசம் வந்து "8

இருவரும் ஒத்து வந்தால் ஒழிய திருவிழாவை நடத்தக்கூடாது என்று கூறியனுப்பியதை நாட்குறிப்பால் அறிய முடிகிறது.

புதுவையில் இருந்த பள்ளித் தெருவில் இறந்து போன இலவாணிச்சியை அடக்கம் செய்ய எடுத்துக் கொண்டு போகையில் இடங்கையைச் சேர்ந்த கம்மாளர்கள் மறித்து விட்டனர். தாரை தம்பட்டம் அடிக்கக் கூடாது எனவும் மறித்தனால் வலங்கையர் துரையிடம் முறையிட்டனர். இதனாலும் சாதிப் போராட்டம் நிகழ்ந்ததை நாட்குறிப்பின் பக்கம் 158 தெளிவுபடுத்துகிறது.

இதைப்போன்று கி. பி. 1778 முதல் 1792 வரை தாம் நேரில் கண்ட வரலாறு மற்றும் பண்பாட்டுத் தரவுகளை இந்நாட்குறிப்பில் வீரா நாயக்கர் பதிவு செய்துள்ளார். இவர் வரலாற்றுத் தொலை நோக்குடையவர் எனும் புகழுக்குரியவராகின்றார். மேலும் இந்நாட்குறிப்பில் அரசியல் நிலை, பண்பாட்டுச் செய்திகள். மக்கள் நிலை போன்றவை பேச்சுத் தமிழிலும் பிற மொழி கலந்த நடையிலும் பதிவு செய்யப்பெற்று வரலாற்று ஆவணமாக மிளிர்கிறது.

8. ஓர் சே மா கோபால கிருஷணன், மு.கா. நூல், ப 136

140

காகிதச்சுவடி ஆய்வுகள்