உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சொ. இரவி தமிழ்த்துறை

எஸ். கே. எஸ். எஸ். கலைக்கல்லூரி திருப்பனந்தாள்

ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் வாழ்வியல்

'எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்' - ஆம்! 'அறிவியலும் கலையும்' போற்றிப் பாதுகாக்கப் பெறவேண்டியவைகள். வரலாற்றில் இடம் பெறத்தக்க நற்பெற்றியர்கள் தங்கள் வாழ்வியலை முறையாக எழுதி வைக்கவில்லை. ஒரு சிலரே தங்கள் 'நாட்குறிப்பாக'வேணும் எழுதி வைத்தனர். அவர்கள் (வாழ்வியலை நேரில் கண்ணுற்றவர்கள்) செய்யுள் வடிவிலும் ஓலைச் சுவடியிலும் கையெழுத்தாகவும் எழுதி வைத்தனர். மேலும் நற்றமிழ் நெஞ்சங்கள் எழுதி வைத்த நற்குறிப்புக்களையும் பாதுகாக்கத் தவறி விட்டனர். வழி வழி வருவோர்க்கு வேண்டிய நற்கருத்துக்கள் இதனால் கிட்டாமல் போய் விடுகின்றன.

கட்டுரையின் பொருளாளர் 'புதுவை அறச்செம்மல் - திவான் - திருமிகு ஆனந்த ரங்கம் பிள்ளையவர்களின் வாழ்வியற் செய்திகளையும் முறையாக நம்மவர் பாதுகாத்து வைக்கவில்லை; இருப்பினும். பிள்ளையவர்கள் செய்த முற்பிறவிப் பலனின் காரணமாக அவரைப்பற்றிய ஓலைச் சுவடிகளும் அதன் செய்திகளும் அவர் தாமே கையால் எழுதிய நாட்குறிப்புச் செய்திகளும் கிடைத்துள்ளன. அதனை யொட்டி, இக்கட்டுரை பிள்ளையவர்களின் வாழ்வியலை ஆய்கின்றது.

தகைமை

ஆனந்தரங்கம் பிள்ளையவர்கள் பெயருக்கேற்பவே ஆனந்தமாய் வாழ்ந்தவர்கள். எளிய வாழ்க்கையையே விரும்பினார்கள். புதுவை அரசின் 'திவானாகவும்', 'நாட்டு மக்களின் வாழ்க்கை மேற்கொண்டவராகவும் இலங்கினார்கள்.

பிறப்பு

தலைவராகவும்'. பொருள் மிக ஈட்டினாலும்.

சென்னைப் பிரம்பூரில் கி. பி. 1709இல் சனிக் கிழமையன்று 'தோன்றிற் புகழொடு தோன்றுக' என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றை மெய்ப்பிக்க வந்துற்றார் போல இப்போதே நாம் அவரைப்பற்றி எழுத அப்போதே தோன்றினார் எனலாம். தந்தையார் திருவேங்கடம் பிள்ளையவர்கள்; மைத்துனர் 'நைனியாப் பிள்ளை' அவர்கள்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

141