உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




செங்கற்பட்டின் கோட்டைத் 'தளபதி' ஆனார். ஜில்லாவின் 'ஜாகீர்தார்" ஆகவும் நியமனமானார்.

பட்டங்கள் வழி, பிள்ளையவர்களின் புகழ் ஓங்கவே கவர்னர் துய்ப்ளேக்ஸ்' பிள்ளையை இந்திய மக்களின் தலைவராக்கினார்

மரியாதை

கவர்னர் காரியாலயத்திற்கும் பல்லக்கில் அமர்ந்தே மேள வாத்தியங்கள்' முழங்கச் செல்வார். தங்கப்பிடியுடைய கைத் தடியும் பாதரட்சையும் அணிந்து செல்வதும் அவரது மரியாதையை உயர்த்திக் காட்டிற்று.

சிறந்த ஊர்க் காவலராயும் திகழ்ந்தார். ஊர்ச்சாவடி வழக்குகளை நேரில் கண்ணுற்று முரண்பாடு களைபவராயும் இலங்கினார். நாணயம் மிக்க முதலாளிகளைப் பல ஊர்களுக்கும் சென்று அவ்விடத்தின் நிலைமைகளை அறிந்து வரச் செய்தார்: அதன் வழி சபைகளுக்கு நல்ல யோசனைகளையும் வழங்கியுள்ளார். பலரின் தொடர்பு

பிள்ளையவர்கள்

தென்னாட்டு மன்னர்களுடன்' தொடர்பு- கொண்டிருந்தார். அம்மன்னர்களுக்கு அன்பளிப்புப் பொருளாய் அழகிய 'புரவிகள்', 'நாய்கள்', 'பரிமளப் பொருட்கள் போன்றவற்றை நல்கியுள்ளார்.

உள்நாட்டு வெளிநாட்டுடன் உறவினைப் பலப்படுத்திச் சிறந்த 'ராஜ தந்திரியாய் - 'மத்தியஸ்தராய்'த் திகழ்ந்தார்.

குடிமக்களின் உரிமைகளை மதித்துக் காத்தார்; பலரது தொடர்பினால் நாட்டில் வெள்ளி. செம்பு, மற்றும் தங்க நாணயங்கள் நடைமுறையில் இருந்தன. கி. பி. 1938 வரை, 'தங்கச் சாலை' யொன்று புதுச்சேரியில் அமைந்திருந்தமை

எண்ணலாம்.

நாணயம் 'அச்சிடுவதில்' நாணயம் காத்த நாணயர்.

சிறந்த படைத்தளபதி

செலின் டேவிடு கோட்டையின் மீது பிரெஞ்சுக்காரர்கள் படையெடுத்த சமயத்தில் 'தக்க ஆலோசகராய்த் திகழ்ந்து காத்துள்ளார். அச்சமயம் ஞாயிறும் ஞாயிற்றின் ஒளி போலவும் திகழ்ந்தவர்கள் கவர்னர் 'துய்ப்ளேக்ஸும் ஆனந்தரங்கம் பிள்ளையும்' ஆவர்.

'சரித்திர நாயக'னாய்ப் பிரெஞ்சுக் கம்பெனியில் பூசல்கள் வராதவாறு நடு நிலைமையுடன் திகழ்ந்தார். வர்த்தகத்தில் குறைபாடில்லை; ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் மூட்டைகளில் பிரெஞ்சு எழுத்து 'R';ம் பிள்ளையின் பெயரும் உடைய சின்னமும் காணப்பெற்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

143