உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சிறந்த நெசவாளர் நாட்டுப்பற்று மிக்கவர்

கைத்தறி நெசவாளர்களை உடன் நின்று ஊக்கப்படுத்தினார். நெய்யும் துணிகள் நேர்த்தி மிக்கவை: நம் நாட்டின் 'நெசவு வண்மை'யை உலக றியச் செய்தவர்.

தாம் வாங்கும் போதும் புதுச்சேரித் துணிகளையே ஏராளமாக வாங்கினார். 1. வெள்ளைத் துணிகள் 2. நீலந் தோய்த்த துணிகள் 3. சாய நூற்களைக் கொண்டு நெய்த துணிகள் 4. அச்சுக் குத்திய துணிகள் போல்வன வகைப்பாட்டினுள் அடங்கும்.

வெள்ளைத் துணிகளே தென்னாட்டுத் துணிகள்' என்று வழங்கப் பெற்றன. சாய நூற்களைக் கொண்டு சென்னையில் ஒருவகைத் துண்டும் (கைத்துண்டு) நெய்யப் பெற்றது; வெளி நாட்டவர் விரும்பி வாங்கிப் போற்றினர் : அதற்குச் சென்னைக் கைத் துண்டு' என்று பெயரும் விளங்கிற்று.

கி. பி. 1762இல் 'புய்சி' என்பவர் ஐரோப்பாவிற்குச் சென்ற போது அந்தக் கைத் துண்டுகளில் 482 'போம்பாதூர்' அம்மையாருக்கு வொரு 'தங்கப் பெட்டியில்' வைத்துப் பரிசாகத் தந்துற்றார்; அதில் 'சைலாசு' துணிகள் 8அடி நீளம் உள்ளவை.

இவ்வாறு நாடே போற்றும் அளவிற்கு நெசவாளர் பணியில் தாமும் உடன் நின்று உரம் அளித்தார்.

சிறந்த வாணிகர் மற்றும் கணக்கர்

கடல் வழி வாணிபத்திற்கு அடிகோலியவர்; கப்பலின் பெயர் 'ஆனந்தப் புரவி' என்பதாகும். அவருக்கே சொந்தமான ஆனந்தப் புரவியாகும்.

பிள்ளையவர்கள் தமது 'நாட்குறிப்பில்' இதனையெல்லாம் தாமே விளக்கமாகக் கையால் எழுதி வைத்துள்ளார்: வாணிபத்தில் 'கணக்குப் பதிவியல்' முறையையும் கையாளைமை நாட்குறிப்பின் வழி தெளியலாம்.

தமது 'நாட்குறிப்பால்' நகைகள்மீது கடன் கொடுத்தமை பற்றியும். கிழக்கிந்தியக் கூட்டத்தாரிடமிருந்து சிற்சில நற்காரியங்களுக்கு முன்பணமாகப் பெற்ற தொகைகளைப் பற்றியும் எழுதி வைத்துள்ளார்.

சிலாசாசனப் பரிசோதகர் திரு 'துய்ப்ரேய்' என்பவர் கி. பி. 1928இல் பிள்ளையவர்களின் சொந்த இல்லத்தில் அவரது சந்ததியாரின் துணை கொண்டு 'புத்தகம்' ஒன்று கண்டெடுத்தார். அதுவொரு 'கணக்குப் பதிவேடு'; வரவு செலவுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் பற்றிய நிதிநிலை விவரங்கள் காணப்பெற்றன; அப்புத்தகம் இன்றைய 'வணிகவியல்' (Commerce) துறைக்கும் பெரிதும் பயன்படத்தக்கதாகும்.

கணக்கியல் குறிப்புக்கள் தமிழ் மொழியின் சாதாரண நடையே; பிள்ளைவர்கள் எழுத்தோ அல்லது சிப்பந்திகளின் எழுத்தோ ஆகலாம்; இக்குறிப்புக்கள் 'சரித்திரத் தொடர்பு அற்றன என்றாலும் 'அரசியல் துறையில் அக்காலத்தில் ஈடுபட்டிருந்த பலரது பொருளாதார நிலையை' உணர்த்தவல்லன வெனில் மிகையாகாது.

144

காகிதச்சுவடி ஆய்வுகள்