உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிரெஞ்சு இந்தியச் சரித்திர ஆராய்ச்சிச் சங்கத்தார் பிள்ளைவர்களின் 'கணக்குப் புத்தகத்தை'ப் பிரெஞ்சில் மொழி பெயர்த்து. கி. பி. 1930இல் வெளிப்படுத்தினர். இதன் மூலப் பிரதி 'புதுச்சேரி அரசாங்கப் புத்தக சாலையில்' வைக்கப் பெற்றுள்ளது.

புலவர்களைப் புரக்கும் புரவலர்

பன்மொழிப் புலமையும் கல்வித் திறமும் அன்பும் அடக்கமும் உடையவர்: தமிழ் மொழிப் பற்று மிக்கவர்; சிறந்த ஆன்மீக வாதி! பிள்ளையவர்களின் புகழ் பாடிப் பரிசில் பெற்ற புலவர்களும் ஏராளம்.

ஆனந்தரங்கம் பிள்ளையைப்பற்றிய செய்யுள் ஒன்று 'ஒலைச் சுவடி'யாய் இருக்கின்றது; புத்தக வடிவில் வெளி வந்துற்றால் நலம் பயக்கும் இதனை யாத்தவர் இலக்கண விளக்கம் 'வைத்திய நாத தேசிகர்' ஆவார்.

கண்டு.

புதுச்சேரிக்குச் சென்ற 'மதுர கவிராயர்' பிள்ளையின் கருணையுள்ளம்

"உலங்கொண்ட மணிப் புயனே! பிரம்பூரா

னந்தரங்கா! உன்பாற் செல்ல, வலங்கொண்ட கருடனையாம் இடங்கண்டோம்; நினது நகை முகங்கண்டோம் "

என உருகிப் பாடியுள்ளார்.

பிள்ளைமீது ‘ஆனந்தரங்கக் கோவை'யும் பாடப் பெற்றுள்ளது. இக்கோவை இன்றும் ஓலைச் சுவடியாகவே உள்ளது.

கஸ்தூரி ரங்கய்யர் தெலுங்கில் எழுதிய 'ஆனந்தரங்க ராட் சந்தமுது' குறிப்பிடலாம். நடன மாதர் பாடி ஆடப் பயன்பெறும் நூல். இந்நூல் 1746இல் பிள்ளையின் அவையில் அரங்கேற்றம் செய்யப் பெற்றது.

சோதிடக்கலை, வான நூல் பயிற்சி முதலியன உடையவர் பிள்ளைவர்கள். சிந்தைநிறை செல்வங்கள்

கல்விச் செல்வம் முதலாம் எல்லா மங்களமும் உடையவர்: அவரது 'ஆனந்த மாளிகை இல்லம் புதுச்சேரியில் உள்ளது: கலை நுட்பத்தோடு கூடிய இல்ல அமைப்பு கலைஞர்களை ஈர்க்கும். குதிரைகள், யானைகள், அழகிய வண்டி ஊர்திகள் யாவும் இல்லத்தை அலங்கரித்தன. அரசியல் - வர்த்தகத் தொடர்புக்கு யானைச் சவாரி - செய்வார். மேலும் தமிழர்களின் திருமணங்களையும் செல்வச் செழிப்புடன் குறையாது மணங் குளிர நடத்தி வைத்தார்.

'அறங் காத்த செல்வரா'யும் திகழ்ந்தார். சத்திரங்கள் பல கட்டினார்; வழிப் போக்கர்களுக்கும் ஏழைகளுக்கும் 'கொள்ளுக் கஞ்சி' நீர் மோர் படைப்பார். பிள்ளையவர்கள் கோயில் காவலராயும் திகழ்ந்தார்கள்; சிறந்த திருமால் பக்தர்; கண்ணன் அவதாரத்தில் கருத்துடையவர். 'வேர்கடம்மா - பேட்டையில் தான தருமங்கள் மேற் கொண்டவர். மேல் நாட்டு வர்த்தகர்களுக்கும் பேருதவி புரிந்தவர். காகிதச்சுவடி ஆய்வுகள்

145