உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




வே. கலைச் செல்வி

ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

சர்மாவின் பயண அனுபவங்கள்

பல்வகை இலக்கியங்களுள் பயண நூலும் ஒரு வகை. உலகப் பயணம் செல்லும் அரிய வாய்ப்பில்லாதவரும் உலகின் பல்வேறு நாடுகளைப்பற்றி ஓரளவேனும் அறிந்து கொள்ள இவ்வகை நூல்களே துணையாம். பயணத்தில் விளையும் பல்வேறு மனவுணர்வுகளுக்கிடையில். கண்ட காட்சிகளையும். இடங்களையும், சந்திப்பவர்களிடம் நிகழ்த்தும் உரையாடல்களையும் நினைவிற் கொண்டு அவற்றை எழுதும் போது, படிப் போருக்குச் சுவை குன்றாமலும், பயன்தரும் வகையிலும் படைப்பது எளிதன்று. நினைவாற்றலுடன் செய்யும் திறத்திலும் சிறந்து விளங்குதல் இதன் சிறப்பு.'

பயணக் கட்டுரை எழுதுவது என்பது ஒரு தனிக் கலை. சிறு கதை. பெருங் கதை ஆகியவற்றை எழுதுகிற முறைக்கும் பயணக் கட்டுரை எழுதுகிற முறைக்கும் வேறுபாடு உண்டு. இந்நூலின் வாயிலாக நாமும் அதே வகையில் இப்பயணத்தை முடித்துவிட்ட உணர்வைப் பெற முடிகிறது.2

காகிதச் சுவடியில் பயண இலக்கியமாக எடுத்துக் கொண்ட நூல் வெ. சாமிநாத சர்மா படைத்த 'எனது பர்மா வழி நடைப் பயணம்' எனும் நூலாகும்.

பயணக் கட்டுரைகள் தமிழ் இலக்கியத்திற்குப் புதியன அல்ல. ஏ. கே. செட்டியாரில் தொடங்கி சோமலெ, சி. சுப்பிரமணியம், காந்திமதி. தேவன், மணியன் முதலியோர் வாயிலாகப் பல கட்டுரைகள் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. பயணக் கட்டுரைகள் எழுதுவோர் பல நாடுகளுக்கும் சில நாட்கள் போய் வந்து விட்டு. கண்டதை, கேட்டதை எழுதுகிறார்கள். சில நாடுகளில் பல நாட்கள் வாழ்ந்து அந்நாட்டு மக்களோடு தோளோடு தோள் உரசி. பலவற்றைக் கூர்ந்து நோக்கி அலசி ஆராய்ந்து விஷயங்களை எடை மேடையில் சீர் தூக்கிப் பார்த்துக் கட்டுரை எழுதுவது இன்னொரு வகை.3

1. க. அன்பழகன், பெருங் கவிக்கோவின் உலக உலா நூல். அணிந்துரை

2. மு. கருணாநிதி. 'அணிந்துரை', சோலை இருகன், கிழக்காசிய நாடுகளில் தமிழ் மணக்கிறது. 3 எஸ். சத்திய மூர்த்தி IAAS

காகிதச்சுவடி ஆய்வுகள்

155