உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மாறிப் போகும்.

நோய்கள் அனைத்தும் நீங்க

ஒரு தூக்கு நல்ல இஞ்சியினை இடித்துச் சாறு எடுத்து எட்டு படி கடத்தில் இட்டு ஓமத்தையும் சேர்த்துக் காய்ச்சி வடித்து உண்டால் குன்மமெல்லாம் ஓடிப் போகும். இதனை.

"நல்லிஞ்சி தூக்கென்று யிடித்துச் சாரு

நலமாகப் படியெட்டுக் கடத்திலிட்டு

மெல்லவே ஓமமிகு நீரில் நேராய்

விதமாக வாலையிட்டு வடித்து உண்ண கொல்ல வந்த குன்மமெல்லா மோடிப் போகும் கொடுமையுள்ள வாயு முதல் வெப்பும் போகும்

மெல்லவே பிணியெல்லாம் மகன்று போகும்

மேதினியில் யாகோபு விளம்பினாரே (பா. 467)

என்ற பாடல்வழி யறியலாம்.

இளநீர்க் கிருதம்

இளநீரில் ஒரு சேர் உள்ளிப் பூண்டை உரித்துச் சேர்த்து அவித்து முன்னீர் தன்னில் உண்ண வேண்டும். திரி நேரத்தில் கால் வீக்கம், வயற் போதல், மூலவாய்வு இவையெல்லாம் ஓடி விடும். புளி சேர்க்கக் கூடாது

பிரண்டை ரசம்

பிரண்டையுடன் நல்லுள்ளியினை நீரில் கலந்து சட்டியில் போட்டு அவித்து அதைக் கடைந்து வைத்துக் கொண்டு ஒரு படி மோரில் மிளகாய், மிளகு, உப்பு, புளி இவற்றைக் கரைத்துப் போட்டுக் கொதிக்க வைக்க. பிரண்டைரசம்' கிடைக்கும். இதனை உண்டால் வாந்தி, வாய்வு. மந்தம், மாந்தம், பேதி, மூலவாய்வு முதலானவை ஓடி விடும். பசியுண்டாகும் வாய்வு நீங்கும் மூல முளையும் சுருங்கும். முளையு மில்லாது போகும். பிரண்டைச் சுண்ணம்

குழந்தைப் பாலில் பிரண்டையினை இட்டு, அவித்து வெந்த பாலுடன் பிழிந்து அதில் திரிகடுகு கிராம்பு, ஏலம் இவற்றை வகைக்கு ஒரு பலம் என இடித்துப் போட்டுச் சூரிய ஒளியில் காய வைத்துத் தூளாக்கி மூன்று விரலளவு ஆறு வேலை உண்ண வாத பித்தம், மூல வாய்வு, குன்மம், மாந்தம், கண்ணெரிவு, சோகை, கரப்பான் முதலான அனைத்தும் போகும். காயம் உறுதியாகும். மகத்தான இந்த மருந்தினை உட்கொண்டால் பல பிணிகளும் போகும்.

முடிவுரை

மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும் பல்வேறு வகைகளிலே யாகோபு மருந்து செய் குறிப்புகளைத் தந்து செல்கின்றார். இவர் போன்ற சித்தர்களின் மருத்துவக் குறிப்புகள் அடங்கிய காகிதச் சுவடிகள் எண்ணிலாதவை. அவை நன்முறையில் காக்கப் பெறவேண்டியவை காக்கும் பணிகளில் ஈடுபடுவோமாக!

154

காகிதச்சுவடி ஆய்வுகள்