உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிரந்தி முதலான பலவும் போய் விடும்.

வாந்தி பித்தம்

முப்பழத்தின் புறத் தோல்கள் நான்கு பலம், முதிர்ந்த சம்பா நெற்பொரி 4 பலம், இவை இரண்டையும் காய வைத்து இடித்து வடி கட்டிச் சூரணத்தை அனுபானத்துடன் சாப்பிட இருமல், வாந்தி, பித்தம், கபம், வாய்நீர் முதலான அனைத்தும் குணமாகும். உடல் வலுவடையும்.

சூதகவாய்வு

அரை நாழி கற்பூரவல்லிச் சாற்றுடன் அரை நாழி வெங்காயச் சாறும். ஒரு படி முத்தெண்ணெயும் கால்பலம் சீரகத்தையும் சேர்த்து எண்ணெயில் இட்டுக் காய்ச்சி எட்டு நாட்கள் உட்கொண்டால் உள்மூல வலி, கடுப்பு, சீதம், இரத்தம் இவையனைத்தும் நிற்கும். ஒரு கரண்டி உட்கொண்டால் சூதகத்தவறும் போகும்.

அண்ட வீக்கம்

முடக்கத்தான் வேர், மிளகு. பூண்டு. முத்து விளக்கெண்ணைதனில் காய்ச்சி உண்ண விரைவாதம் அகலும்.

நுணாவின் வேரைக் காயவைத்துச் சூரணம் செய்து வைத்துக் கொண்டு கையாந்தரை. செருப்படியின் சாற்றில் இருகழஞ்சு அளவு கொடுக்க. சூலை. விரைவாதம் முதலானவை நீங்கும்.

வெட்டை

பொன் நிறமுடைய எலுமிச்சம் பழத்தின் சாறு எடுத்து (1 கரண்டி அதனுடன் நல்லெண்ணெய் கலந்து ஆறு நாட்கள் குடிக்க, நீர்ச் சுருக்கு, வெள்ளைப் படுதல், பிரமேகம் முதலானவை போகும்.

கண்ட மாலைக்குத் தைலம்

சிறியா நங்கையிலைச் சாற்றில் நான்கு படி எடுத்து பசுவின் பால் நான்கு படி சேர்த்து எரிக்க நெய்யதாகும். அதனை எடுத்துத் தலையில் தேய்த்து முழுக, பித்தம் முதல் பொடுவுகள். கண்ட மாலை முதலானவை போய் விடும். குளிர்ச்சியாகும்.

பொன்னாங்கண்ணித் தைலம்

கல்லூரலில் பொன்னாங் கண்ணியை இட்டு ஆட்டிச் சாறெடுத்து அதனைப் போன்று இரு மடங்கு திலகம் சேர்த்து, பிடித்து அதனைப் போன்றே பாணி ரெட்டி வகையாக யெரித்து முடி ஊற்றிக் காய்ச்சித் தைலம் இறக்கித் தலையில் தேய்த்து முழுகிவரக் கண்கள் நன்கு துலக்கமாகத் தெரியும்.

இப்படி மூழ்கும் போது பாசிப்பயறும் சீயக்காயும் சேர்த்து அரைத்து மூழ்கினால் தலைக்குக் குளிர்ச்சியாகும். கண் பார்வை நன்கு தெரியும். வெள்ளெழுத்து காகிதச்சுவடி ஆய்வுகள்

153