உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்நூலின் வழி உரைக்கும் மருத்துவ முறைகளைப் பட்டியலிடும் யாகோபு. யார் யாருக்கு இந்நூலைத் தரல் வேண்டும்? யார் யாருக்குக் கொடுக்கக் கூடாது என்றும் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இதனை,

"தன் மருககுங் கன்மருக்குந தனங்கள் ரொம்பத் தாட்டிகமாய்க் கொடுப்போர்க்கும் வழிபட்டோர்க்கும் வன்மவினை தீருமெனறு இந்நூல் தன்னை

வாழ்த்தியே கொடுத்துவிடு மற்றுமினனம்

கன்மமுள்ள கசடருக்குஞ் கண்டாளர்க்கும்

கலிமிடியின் காமியர்க்கும் பாதகர்க்கும்

நன்மையுள்ள நூல் கொடுத்தால் நரகமெய்தும்

நானிலத்தில் யாகோபு நலஞ் சொன்னேனே (பா : 12)

என்ற பாடலால் அறியலாம்.

மருத்துவக் குறிப்புகள்

பல்வேறு மருத்துவ முறைகளையும் குறிப்புகளையும் தம் சுவடியில் யாகோபு தந்து சென்றாலும் இலக்கியவாதிகளுக்கும் புரியக் கூடியதாய், அனைவரும் பயன் கொள்ளத்தக்கதாய் அமைந்த ஒரு சில மருத்துவக் குறிப்புகள் மட்டும் இவண் தரப் பெறுகின்றன.

காமாலை

சிறு நெல்லிதனைப் பிடுங்கி உரலில் இட்டு நன்றாக இடித்துப் பிழிந்து பசுவின் பால் நிறையவிட்டு, சிறிது படிகாரம் சேர்த்து உண்டு வந்தால் ஆறு நாட்களிலேயே உடலில் உள்ள காமாலை ஓடிப் போகும்.

கசப்பு, உப்பு, புளி சேர்க்கக் கூடாது.

இருமலுக்குக் கியாழம்

நெல்லி, தான்றிக்காய். இஞ்சி இவற்றைச் சமஅளவு எடுத்துபிடித்து, சட்டியில் இட்டு எட்டு பங்கு ஒரு பங்கு ஆகும் வரை காய்ச்சி, திரிகடுகுப் பொடியில் இட்டு மூன்று நாட்கள் உட்கொண்டால் தீராத உஷ்ணம், கபம், இருமல். கோழை முதலான அனைத்து நோயும் தீரும் உடல் உறுதியாகும்.

ஆகும் வரை காய்ச்சி, திரிகடுகுப் பொடியில்

பித்த வெட்டை மற்றும் நீரிழிவு நோய்க்குக் கிருதம்

இருபது ரஸ்தாளிப் பழங்களோடு காராம் பசுவின் நெய், தேன், சர்க்கரை, எட்டு பலம் சீரகம் இவற்றைச் சேர்த்து இடித்து. சூரணம் கலந்து காய்ச்சித் தினந்தோறும் காலை மாலை இரண்டு வேளையும் ஒரு கரண்டி அளவு உண்ண. நீரிழிவு, பித்த வெட்டை. பயித்திய விகாரம் முதலான அனைத்தும் நீங்கும்.

மேகம் போகக் குமரி எண்ணெய்

இரண்டுபடி கற்றாழைச் சாற்றுடன் எட்டு பலம் குமரி, கெந்தி சேர்த்து ரெட்டி சிற்றாமணக் கெண்ணெய் கூட்டித் திரண்ட பதமாய் வடித்து உட்கொண்டால் மேகம். காகிதச்சுவடி ஆய்வுகள்

152