உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




க.இளமதி சானகிராமன் இணைப் பேராசிரியர் தமிழ்த்துறை

புதுவைப் பல்கலைக்கழகம்

யாகோபு வைத்திய சிந்தாமணி 700

முன்னுரை

'யாகோபு வைத்திய சிந்தாமணி 700' என்னும் இக்காகிதச் சுவடி. இலேகியம், கிருதம். எண்ணெய், பற்பம், களங்கு, கட்டு. திராவகம், கியாழம், செந்தூரம், சூரணம். புகை, வைப்பு, குளிகை எனப் பல்வேறு மருத்துவ முறைகளைத் தந்து செல்கின்றது. இக்கட்டுரை, இச்சுவடியை யாத்த 'யாகோபு' குறித்தும், குறிப்பிடத்தக்க சில மருத்துவ முறைகளை மட்டும் இவண் விளக்கிச் செல்கின்றது.

காகிதச் சுவடி நிலை

கன்னி மாரா நூலகத்தில் காகிதச் சுவடியாக இருக்கும் இந்நூல் இரத்தின நாயகர் அண்ட் ஸன்ஸ் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது. பக்கங்கள் சரி வர இல்லையாதலால் பதிப்பித்த ஆண்டினை அறிய இயலவில்லை. தொட்டாலே ஒடிந்து விடும் நிலையில் இருப்பதுவே இச்சுவடியின் இன்றைய நிலை.

யாகோபு - பெயர் வரலாறு

இராம தேவர் என்ற பெயரோடு இருந்த ஒரு சித்தர் தாம் எழுதிய நூலைத் திருமூலரிடம் சிலர் கொடுக்க, அதனை அவர் கிழித்து எறிந்ததால் கோபமுற்று அக்கட்டத்தை விட்டுச் செல்கின்றார். குளிகை பாட்டு மக்கா தேசம் போகவே அங்கேயிருந்த முகமதியர்கள் இவருடன் வாதம் செய்து இவரது திறமையை அறிந்து நபிகளிடம் அழைத்துச் செல்கின்றார்கள். நபியும் இவரையறிந்து 'யாகோபு' என்று பெயரிட்டுச் சுன்னத்துச் செய்து தொப்பியும் தருகின்றார். இதனை,

ஆதிமுத லென்பேரு இராம தேவர்

அடைவாகக் குளிகையிட்டு மக்கா தேசம்

வீதியிலே சென்று புக்கச் சாய்புகண்டு

விரும்பியே சாஸ்திரத்தில் மிகவும் பேசி*

'உறுதியுற்று யிருக்கையிலே யாகோப்பென்று

(பா. 6)

உண்மைப் பேர் கொடுத்துச் சுன்னத்துச் செய்து அருமைபெறத் தொப்பியொன்று யீந்தாரப்போ அசனுசனும் வேறல்ல நீநானென்றேன்" (பா :7)

என்ற பாடல்கள் வழி அறியலாம்.

காகிதச்சுவடி ஆய்வுகள்

151