உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இடம்பெறுகிறது. 'மா' என்றால் 'விலங்கினம்' என்றும், சிறகி என்பதற்குக் கடலகனாகிய கடல் அரச விலங்கினமாகிய 'சிறகுடைய கடல் விலங்கு' என்ற பொருளும் உள்ளதால் பண்டைய தென்னிந்தியப் பண்பாட்டின் தொடர்பையும் அறியமுடிகின்றது. ஏனெனில் தமிழகத்தில் 'சிறகி' என்பதற்கு 'இருக்கின்ற இடத்தைச் சுற்றி அன்னியக் கடல் விலங்கினங்கள் வந்து தாக்காது பாதுகாக்கும் தன்மையைக் கொண்டது சிறகி என்னும் கடல் விலங்கினம் ஆகும். இப்பெயரைப் பேக்சே நாட்டின் அரச சின்னமாகக் கொண்டமையால் தென்னிந்தியத் தொடர்பு இருந்துள்ளதை உறுதிசெய்கிறது. எனவே, தென்கிழக்காசியாவில் பேசப்படும் கடாரம் பற்றிய வரலாறு தெளிவில்லை என்பதாலும் கி. பி. 4ஆம் நூற்றாண்டில் சிறப்புப் பெற்றுத் திகழ்ந்த பேக்சே நாட்டின் கடாரமே பின்னர்க் காலப்போக்கில் தென்கிழக்காசியப் பகுதியைக் குறிப்பிடும் ஓரிடமாகவும் நாடாகவும் பேசப்பட்டிருக்க வேண்டும். எனவே குடாரா அல்லது கடாரா என்னும் கொரிய நாட்டின் பேக்சே நாட்டின் பெயரே சோழர்களின் ஆவணங்களில் குறிக்கப்படும் கடாரமாக இருந்திருக்க வேண்டும் இருப்பினும் குடாரா என்னும் பெயர் கடாரா என்றழைக்கப்படும் பெயரும் ஒன்றாகக் கருதப்படலாமா என்ற வினா பொதுவாக எழுவது எளிது. குடம் என்பது கடம் எனப் பெயராகியது போல் இங்கு கடாரா என்பதும் குடாரா என்பதும் ஒன்றே எனக் கருதலாம். எனவே, இதுவரை வரலாற்று அறிஞர்களால் சொல்லப்பட்டுவரும் கடாரம் இருப்பிடம் ஸ்ரீவிஜயம் நாட்டில் உள்ளதாகவும் குறிக்கப்பட்டு வந்துள்ள கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில் பண்டையக் கொரிய நாட்டின் கடாரமே தமிழக வரலாற்றில் குறிக்கப்படும் கடாரம் எனக் கருதலாம்.

150

காகிதச்சுவடி ஆய்வுகள்