உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காமு நாகி [Kamunagi). அருடவாகி (Arudewake). கிமி (Kimi] போன்ற வணங்குதற்குரியவர்கள் பூமி [Pumi] என்ற தெய்வத்தின் வழித்தோன்றலான அதிகிசி (Atikisi) மற்றும் நெசவுத் தொழில் தொடர்பில் காரா, குறே [Kure] (கூறை?) போன்ற சொல்லாட்சிகளும் பெயர்களும் இந்தியப் பண்பாட்டினை உணர்த்துகின்றன.

கடாராவும் பேக்சேவும்

பண்டைய கொரிய நாட்டிலிருந்த மூவேந்தர்களின் ஆட்சிக்குரிய ஒரு நாடாகிய பேக்சேவின் வரலாற்றில் 'குடாரா' அல்லது 'கடாரா' என்னும் பெயர் பல்வேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாகக் 'குடாரா' என்பதற்கு நதி, குளம், அரண்மனை, நாடு என்னும் பொருள் குறித்தே அமைகின்றன. ஜப்பானிய நாட்டில் குடியேறிய பேக்சே பகுதி மக்களால் குடாரா பெயர் சிறப்பாகப் பேசப்படுகிறது. புத்தரின் திருவுருவச் சிற்பம் 'குடாரா கண்ணன் (Kudara Kannon) என்று அழைக்கப்படுகிறது. இச்சிற்பத்திற்குரிய இணையான பெயராக 'பேக்சே கூவானின்' என்றழைக்கப்படுகிறது. இங்கு குடாரா' என்பது பேக்சே நாடு என்னும் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு சான்று 'குடாரா தேரா (Kudara Dera] என்பதாகும். இங்கு 'பேக்சே கோயில்' என்றும் பெயர் சுட்டப்படுவதாகவும் அல்லது 'பேக்சே அரண்மனை' என்றும் பெயர் கூறப்பட்டதாகவும் கருதலாம். ஏனெனில் 'தேரா' என்பதற்குக் 'கோயில்', 'அரண்மனை' எனப் பொருள்படுகின்றது. இப்பெயர் முறைகளைக் காணும்பொழுது குடாரா என்பதற்குப் பேக்சே நாட்டைக் குறிப்பிடும் சொல்லாகவும் கருத வாய்ப்பாகின்றது எனக் கூறலாம். மேலும், பேக்சே நாட்டின் நதிக்கும் 'குடாரா' என்று பெயர். குடாரா நதிக்கரையில் அமைந்த பேக்சே அரண்மனை ‘குடாரா (கடாரா) அரண்மனை' என்றழைக்கப்பட்டது.

பேக்சேவும் தென்னிந்தியாவும்

குடாரா என்பதுதான் கடாரம் என்றாகித் தென்னிந்தியாவில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய மேலும் சில ஆவணங்கள் உதவுகின்றன. கி.பி.384இல் மாறானந்தன் என்னும் பௌத்தத் துறவி தென்னிந்தியாவிலிருந்து பேக்சே நாட்டிற்குச் சென்று பௌத்த மதத்தையும் கோயிற் கட்டடக்கலைத் தொழில் நுட்பத்தையும் முதன் முதலில் கொரிய நாட்டில் (பேக்சே நாட்டில்) பரப்பியவர். எனவே, கி. பி. 4 ஆம் நூற்றாண்டிலேயே கொரியாவின் பேக்சே நாட்டிற்கும் தென்னிந்தியாவிற்கும் தொடர்புகள் இருந்துள்ளன என்பதையும் உணரமுடிகிறது. மேலும் தென்னிந்தியாவிலிருந்து சென்ற ஒரு பெண் தென்கொரியாவின் தென்பகுதியை ஆண்ட மன்னரை மணந்து அரசியாக வாழ்ந்த வரலாறும் கொரிய நாட்டின் கி. பி. 4 ஆம் நூற்றாண்டில் இடம் பெற்றுள்ளது. திராவிட மொழியின் தாக்கங்களும் கொரிய மொழியில் உள்ளன என்பதையும் ஒப்பிட்டுக் காணுதல் மேலும் அவசியமாகிறது.

சிறகிக் கோமா (Siragi Koma]. என்னும் பெயர் பேக்சே நாட்டின் அரச சின்னமாகி சிங்கத்திற்கு (யாளி?) பெயராகியுள்ளது. கோ என்பதற்குப் பெரிய என்னும் பொருளே கொரிய மொழியில் இடம் பெறுகின்றது. கோ கொரியோ [Koguryeo] என்னும் பண்டைய கொரிய நாட்டின் பெயரில் இடம்பெறும் 'கோ' என்னும் முன்னொட்டுக்கு அரசன், பெரிய, சிறந்த, மா என்னும் பொருளே கொரிய மொழியில் காகிதச்சுவடி ஆய்வுகள்

149