உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அரசர்களும் ஸ்ரீவிஜயம் அரசர்களும் ஒன்றே எனத் தமிழர்கள் கருதுவதால் இதன் வரலாறு பிரச்சனைக்குரியதாகி விடுகிறது என்றும் சீன வரலாற்றுக் குறிப்புகளை ஆராயும்பொழுது. கி. பி. 1003 -1082 வரையுள்ள சான்றுகளில் கடாரம் மற்றும் சன்- ஃபோ-திசி. ஸ்ரீவிஜயம் ஆகிய மூன்று பெயர்களும் இடம்பெற்றிருப்பது பற்றிய குறிப்புகள் குறித்து மேலும் ஆராய வேண்டியுள்ளது எனக் கருதுகின்றார். 4

பேக்சே (Paekche) நாடு

கொரிய நாட்டை மூவேந்தர்கள் ஆட்சி செய்து வந்தனர். இம்மூன்று நாடுகளும் முறையே கோ கொரியோ (Koguryeo]. சில்லா [Shilla], [Paekche) பேக்சே என்றழைக்கப்பட்டன. பேக்சே நாட்டின் வரலாற்றுச் சான்றுகள் கி. பி. 2ஆம் நூற்றாண்டிலிருந்து தொடர்ந்து கிடைக்கப் பெறுகின்றன. சீன. ஜப்பான். கொரியப் பண்பாட்டுத் தொடர்புகள் இந்நாட்டின் வரலாற்றுச் சிறப்பை உறுதி செய்கின்றன. இந்நாட்டு ஆவணங்களில் குடாரா (Kudara] கடாரா (Kadara). கடா (Kada) என்றழைக்கப்படுகின்ற நகரம் பேக்சே நாட்டின் வரலாற்றுச் சிறப்பிற்குரிய இடமாகச் சுட்டப்பட்டுள்ளது.

சிறசிக் குளம்

சிறகி (Siragi) பகுதியிலிருந்து இடம் பெயர்ந்தவர்களால் கி. பி. 398 இல் பேக்சே நாட்டில் ஒரு பெரிய குளத்தை வெட்டினர். இந்தப் பணியை முன்னின்று நடத்தியவர் 'தக்கசி-உதி-நோ-சுகுனே' என்று பேக்சே வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. இக்குளத்திற்கு 'கடாரா நோ-இகி' என்று பெயரிட்டழைத்தனர். பிற்காலத்தில் கடாரா என்னும் பெயர் பேக்சே நாட்டின் பெயராகவும் சுட்டப்பட்டு வந்துள்ளதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

5

'தக்கசி' என்பதற்குத் 'தச்சன்' என்பது பொருளாகும். சோழ கங்கம் என்று இராசேந்திரசோழன் தன்வெற்றிச் சிறப்புக் கருதிப் பெயரிட்டதைப் போன்று கொரிய நாட்டின் கடாரா நதியின் சிறப்புக் கருதி அல்லது நாட்டின் பெயர்ச் சிறப்புக் கருதிக் ‘கடாரா நோ-இகி என்று பெயர் பெற்றிருக்கக்கூடும் எனக் கருதலாம்.

முன்னோர் தெய்வங்கள்

7

கொரிய நாட்டின் வரலாற்றுக் கூறுகளைக் காணும்பொழுது பல்வேறு செய்திகள் இந்தியப் பண்பாட்டின் தொடர்பை வெளிப்படுத்துவனாக அமைகின்றன. குமி [Kume] என்னும் கடற்றெய்வத்தின் முன்னோர் வழித் தெய்வமாக சின்மோசின் (Chinmochin) அல்லது மாகெட்சு (Maketsu) என்னும் தெய்வம் பேசப்படுகிறது. சாசனங்களைப் படிக்கும் மரபினரான எசிக்கி (Achikki) கல்விக்குரிய முன்னோர் தெய்வமாகிய வாணியின் [Wani] தொடர்பில் வந்தவராகவும் சுட்டப்படுகின்றார்.

4 Noboru Karashima, “Indian Commerial activities, Medieval Southeast Asia". Pienary Session Papers, stn Worid Tamil Conierence, Thanjavur, 1995, p.4. Wontack Hong, Paekche of Korea and the origin of Yamato Japan, Kudara International, Seoul, 1994, p. 112.

5

6 Raju Poundurai, Traditional Architecture of Korea, Seoul, 1996, p. 60.

7 Jon Carter Covell and Alan Covell, Korean impact on Japanese Culture, Seoul, 1984, p 56

148

காகிதச்சுவடி ஆய்வுகள்