உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ராசு. பவுன்துரை

ணைப் பேராசிரியர் கட்டடக் கலைத்துறை

தமிழ்ப் பல்கலைக்கழகம்

தஞ்சாவூர்

கடாரம்

·

ஒரு மறு ஆய்வு

லைகளில்

தமிழக வரலாற்று ஆவணங்களில் கடாரம் [Kadaram] என்றழைக்கப்படும் இடம் பற்றிய வரலாற்று அறிஞர்களின் கருத்துக்கள் பல்வேறு பேசப்படுகின்றன. இதுவரை வெளிவந்த கருத்துக்கள் அனைத்தும் 'கடாரம்' என்னுமிடம் மலாய்த் தீவுப் பகுதியில் அமைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளன. இராசேந்திரசோழனின் 14ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு முதன் முதலில் 'கடாரம்' குறித்துப் பேசுகின்றது. 'கடாரம் கொண்டான்' என்ற மெய்க்கீர்த்தி கடாரத்தின் வெற்றியைக் குறிக்கின்றது. இருப்பினும் 'கடாரம் பற்றிய கருத்துக்கள் மேலாய்வுக்குரியதாகவும் கருதப்படுகின்றது.

4

கடாரம் என்னும் வரலாற்றுச் சிறப்புமிக்க இடமொன்று பண்டைய கொரிய நாட்டில் பேசப்படுகிறது. கி. பி. 4 - 5ஆம் நூற்றாண்டுகளில் கலை, இலக்கியம். பண்பாடு. கடல் வணிகம் போன்றவற்றில் கடாரம் நகர் சிறப்புப் பெற்றிருந்தது என்பதைக் கொரியா. ஜப்பான் ஆவணங்களும் சீனநாட்டுச் சான்றுகளும் வெளிப்படுத்துகின்றன. எனவே. கடாரம் குறித்த ஆய்வுகளை மறு ஆய்வு மேற்கொள்ளுதல் தேவையாகின்றது

கடாரம்

தென்னிந்திய வரலாற்று அறிஞர்களால் கணிக்கப்பெற்ற கடாரத்தின் இடக்கணிப்புமுறை மிகுந்த சிரமத்தைக் கொடுக்கிறது என்று கூறுகின்ற நீலகண்ட சாஸ்திரியார்1 சீன வரலாற்றுக் குறிப்புகளில் இடம் பெறும் சன்-ஃபோ-திசி (San-fo- tsi) என்பது கடாரம். ஸ்ரீவிஜயம் ஆகிய இடங்களை ஆட்சி புரிந்தவரைக் குறிக்கும் பெயராகவும் கருதுகின்றனர்.2 மேலும் முதலில் கடாரா அரிசிலிருந்த ஸ்ரீவிஜயம் பகுதிதான் முதன் முதலில் இராசேந்திரனால் கைப்பற்றப் பெற்றது எனக் கருதப்படுகின்றது. கடாரம் அரசு என்பது சுமத்திராப் பகுதியிலிருந்த 'பாலம்பாங் பகுதியே என்றும் அது கடாரம் அரசின் தலைமைக்குரிய பகுதி எனக் குறிக்கப்படுவதாகவும் சாஸ்திரியார் கூறுகின்றார்-நொபுரு கராசிமமா கடாரம்

1 KA. Nilakanda Sastri."The identification of Kadaram presents more difficulty", The Cholas, Madras, 1984, p. 215

2

1bid., p. 214.

3

1bid., p 215.

காகிதச்சுவடி ஆய்வுகள்

147