உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




நுண்ணிய கூறுகள் திண்மையுற நிறைந்து விளங்குகிறது"

எனப் பெ.சு.மணி பாராட்டியுள்ளார்.

போர்ச் செய்திகள்

பர்மாவின் தலைநகரான ரங்கூன் நகரத்தின் மீது 1941ஆம் ஆண்டு திசம்பர் 23ஆம் நாள் முற்பகல் 10. 45க்கு எண்பதுக்கும் மேற்பட்ட ஜப்பானிய விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. 2000க்கும் மேற்பட்ட மக்கள் பிணமானார்கள். பலர் பெரிதும் காயமுற்றனர். கட்டிடங்கள் பல தரைமட்டமாகியும். நெருப்புக்கு இரையாகியும் சிதிலமாயின. ஒரிரு நாளில் மீண்டும் அப்பகுதியிலும் எண்பதுக்கும் மேற்பட்ட விமானங்கள் குண்டு பொழிந்து. பெருமை மிக்க நகரினை முற்றிலும் பொலிவிழக்கச் செய்தன. பிரிட்டிஷ் விமானங்களும், அமெரிக்க விமானங்களும் இரண்டு முறை எதிர் கொண்டு தாக்கி மொத்தம் 52 ஜப்பான் விமானங்களை வீழ்த்தின. விமானப் படைகள் மட்டுமன்றி ஜப்பானியக் காலாட் படைகள். பர்மாவின் தென் கோடிப் பகுதி வழியாகவும், மத்தியப் பகுதி வழியாகவும் வரத் தொடங்கின. விமானத் தாக்குதல்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முறைகள் தொடர்ந்ததால் விமான நிலையம். அரசுக் கட்டிடங்கள். அலுவலகங்கள். மின் உற்பத்தி நிலையங்கள். குடிநீர் விநியோக நிலையம். தபால் நிலையங்கள் முதலிய முக்கிய இடங்கள் தகர்க்கப்பட்டன.

போரின் விளைவுகள்

இங்ஙனம் 23 -12 - 41 முதல் 22 - 02 - 42 வரையிலான இரண்டு மாத காலத்தில் 89 முறை ரங்கூன் நகரம் தாக்கப்பட்டது பிரிட்டிஷ் பீரங்கிகளின் எதிர்த் தாக்குதல்களினால் 200 ஜப்பானிய விமானங்கள் நாசமாயின.

தாக்குதல்கள் நடைபெற்ற காலத்தில் ரங்கூன் நகரம் இரவு நேரங்களில், இருட்டடிப்பும் அமுலில் இருநததால் பயங்கரமாகக் காட்சியளித்தது. ஜப்பானிய விமானங்கள் மேலே குண்டுகளைப் பொழியும் சத்தமும், பிரிட்டிஷ் பீரங்கிகள் கீழிருந்து வெடிக்கும் சத்தமும் குண்டுகளின் வெடிப்பினால் கட்டிடங்கள் எரிந்தும். சிதறியும் உண்டான சத்தமும் ஆடு. மாடுகள். நாய்களின் ஒலங்களும் மனிதர்களின் அழுகையும் உயிர் தப்பிய மனிதர்களுக்கு இயல்பாயிருந்தன. அரசினர் ஆங்காங்கு ஆள் பதுங்கு கிடங்குகளை அமைத்திருந்தனர். வீதிகளில் போய் வந்து கொண்டிருக்கும் மக்கள் அபாயச் சங்கு ஊதியவுடன் இந்தக் கிடங்குகளில் சென்று பதுங்கிக் கொள்வதும், அபாயம் விலகிய சங்கு ஊதியவுடன் வெளி வரவும்

செய்தனர். வீட்டில் உள்ளவர்கள் வீட்டுத் தோட்டத்தில் நான்கடி ஆழத்திற்குத் தோண்டி மேலே மரப் பலகைகள் அல்லது தகடுகளை வேய்ந்து இலை, தழைகளைக் கொண்டு பரப்பி மூடி வைத்திருந்தனர். அதன் உள்ளே உடம்பைக் குறுக்கி அமர்வதும். வெளி வருவதும் அவர்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்தது. நாளடைவில் சிலர் பதுங்கு குழிகளில் வெறுத்து. மரணத்தை எதிர் நோக்கியும். தளர்ந்தும், திகிலடைந்தும். கலங்கியும் இருந்தனர். போரின் விளைவுகள் சொல்லொணொத் துயர் விளைவித்ததால் ஏறத்தாழ இரண்டு மாத காலங்கள் நகர்ந்த பின்னர், உண்பதற்கும்.

6 பெ. சு மணி. எனது பர்மா வழிநடைப் பயணம். என்னுரை

காகிதச்சுவடி ஆய்வுகள்

157