உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அருந்துவதற்கும். தங்குவதற்கும் வசதிகள் இல்லாது வாகனப் போக்குவரத்தும் அடியோடு நின்று போனதால். மக்கள் ரங்கூனில் இருந்து கிடைத்த வழிகளில் விரைந்து வெளியேறத் தொடங்கினர். ஆசிரியர் தனது துணைவியாருடன் வாழ்ந்திருந்த வீட்டின் மீதும் விமானங்கள் எரிந்து விழுந்தன.

சர்மாவின் பத்திரிகைப் பணியும் நின்று போய், அகதியான நிலைமைக்குத் தள்ளப்பட்டார். ரங்கூன் நகரத்தை விட்டு வெளியேறி இந்தியாவின் எல்லைக்குச் செல்லும் நடைப் பயணம் தொடங்கியது. இதனால் தமிழுக்கு ஒரு பயண இலக்கியமும் கிடைத்தது

ரங்கூனில் இருந்து நடைப்பயணத்தைத் தொடங்கியவர் 12-02-42 அன்று காலை கல்கத்தாவை அடைந்திருந்தார். 24 - 04 - 42 மாலை சென்னை வந்து சேர்ந்தார். நடைப்பயணத்தைத் தொடங்கியதிலிருந்து சென்னை வந்து சேர்ந்தது வரை அன்றாடம் எழுதிக் கொண்டு வந்திருந்த நாட்குறிப்பு இந்நூல் உருவாகக் காரணமாயிற்று. கையெழுத்துப் பிரதிகளாக இருந்த இந்நூல் 37 ஆண்டுகளுக்குப் பிறகு சர்மாவின் இறுதிக் கால ஆசையின்படி அச்சேறியது முதலில் அமுதசுரபி இதழில் கட்டுரையாக வெளியிடப்பட்டு. அனைவராலும் வரவேற்புப் பெற்றது. பயணத்தில் கடந்து வந்த ஊர்கள்

சர்மர் ரங்கூன் நகரத்தை விட்டுப் புறப்பட்டதும் கடந்து வந்த ஊர்களாகக் குறிப்பிடுபவை. ரங்கூன் - பக்கோடா - காலா பஸ்தி - பெரு நகரம் லெப்படாண் - புரோம் நகரம் - அல்லன் மியோ - தவுண்டிஞ்சி - ஏனாஞ்சங்கு - மெக்டீலா - சௌஸே மாந்தளை நகரம் - மாந்தளைக் குன்று -ஸ்காயிங் ஆவா -வராவதி நதி மேற்கு. கிழக்குக் கரைகள் - பாலம் அமாபுரம்-மொனீவா -மியோஹாஸ் ஸ்டேஷன் யவடாஸ் ஸ்டேஷன் - சிந்த்வின் ஆறு - கலேவா படகுத் துறை -மித்தா நதி இரண்டாஞ்சி - டாமு - வான்சிங் வக்ஸீ (முகாம் - லும்மிஸ் (முகாம்) சிட்டா (முகாம்) - நும்டாக் (முகாம்) வான்சிங்-வக்ஸீ

வான்சிஸ் (முகாம்) - ஹீரோக் சிந்தூர் - டிமாபூர் - இம்பால் - முகாம்

ஸ்டேஷன் - பிரம்ம புத்திரா நதி - அமிஸ்கோன் ஸ்டேஷன் - கோலக்கஞ்ச் ஸ்டேஷன் - சாந்தவிடா ஸ்டேஷன் - கல்கத்தா-(காசி -அலகபாத் - கயை - கல்கத்தா) - சென்னை.

பயணம் செய்த முறை

ஆசிரியர் நடைப் பயணம் என்று குறிப்பிட்டாலும், அதனை விடத் துயர் தரும் வாகனப் பயணங்களையும் இடையிடையே மேற்கொண்டுள்ளமையும் இந்நூலால் அறியப்படுகிறது.

ரங்கூன் நகரம் அழியத் தொடங்கியதும். அடுத்தடுத்துப் புறப்பட்ட கப்பல்கள். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது. கப்பல்களில் செல்ல முடியாதவர்கள் தொடர்வண்டி வழியாகவோ, ஆற்று வழியாகவோ புறப்பட்டனர். கட்டணமேதும் செலுத்தி இத்தகைய பயணம் மேற்கொள்ள இயலாது கூலி வேலை செய்து பிழைத்து வந்தவர்கள் கால் நடையாகவே புறப்பட்டனர். வ. கு. சா. என்ற நண்பர் விட்டுச் சென்ற மோட்டார் காரினைப் பழுது நீக்கி. தனது துணைவியாருடனும். நண்பர்களுடனும். குறைந்த பட்ச சமையல் பொருள்கள். சாதனங்களுடனும். ஆசிரியரின் பயணம் தொடங்கியுள்ளது மாந்தளை நகருக்குப் பின், அதிகாரிகளின் காகிதச்சுவடி ஆய்வுகள்

158