உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உதவியுடன் மொனிலா நகர் வரை தொடர் வண்டிப் பயணமும். படகுத் துறை சென்று நீராவிப் படகுப் பயணம் கலேவா நகர் வரையும் அமைந்தது. மலைப் பாறைகளை உடைத்து மலைப் பாதை அமைக்கும் ஒரிசா மாநிலக் கூலிகளை ஏற்றிச் செல்லும் லாரியில் மிகவும் கரடு முரடான பாதையில் கலேவா விலிருந்து இரண்டாஞ்சி நகர் வரையிலும். பின்னர் மறுநாள் கோடையின் சுட்டெரிக்கும் வெயிலில் அளவுக்கு மிஞ்சிய பாரத்துடன் திறந்த லாரியில் கரடு முரடான சாலையில் பசி, தாகம் உடல் வேதனைகளுடன் நூறு மைல் வரையிலும் டாமு நகர் பயணமும் அமைந்தது. பெண்களும் பொருள்களும் மாட்டு வண்டியிலும். வண்டியைத் தொடர்ந்து ஓட்டமும் நடையுமான மலைப் பயணமும். லக்ஸீ முகாம் வந்தடைந்த பின்னர்ச் சிந்து நேர டோலிப் பயணமும். டோலியைச் சுமக்கக் கூலி ஆள்கள் குறைந்த போது ஏனைப் பயணமும் தொடர்ந்தது. பின்னர் லாரிப் பயணமும் இம்பால் வரை லாரியில் நாற்காலிப் பயணமும் இறுதியில் கல்கத்தா வரை தொடர் வண்டிப் பயணமும் அமைந்தது.

முகாம்களின் நிலைமை

பல்லாயிரக்கணக்கான மக்கள் தாயகம் நோக்கிப் பல்வகை வழிகளிலும் பயணம் மேற்கொண்ட போது உணவும், உறையுளும் அளித்துக் காப்பாற்றியது. ஆங்காங்கே அவசரமாகவும் தற்காலிகமாகவும் ஆற்று ஓரங்களில் அமைக்கப்பட்ட முகாம்களே இம்முகாம்கள் சுகாதாரச் சூழ்நிலையில் அமைக்கப்பட்டாலும் சில பல நாள்களிலேயே அகதி மக்களின் அமைதியற்ற தன்மையாலும். சுயநலமிக்க பொறுப்பற்ற தன்மைகளினாலும் நோய் பரப்பும் இடங்களாகவும் ஆபாசமான இடங்களாகவும் மாறிப் போயின என ஆசிரியர் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

கலேவா படகுத் துறையில் இருந்து பயணிகள் இறங்கியதும், பர்மிய அரசு சுகாதார அதிகாரிகள் பிளேக், காலரா முதலிய நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு ஊசி போட்டனர். பின்னர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். இம்முகாமின் பெரும் பகுதி திறந்த வெளியாயிருந்தது. நடு நடுவே ஒரு சில கொட்டகைகளும் கூடாரங்களும் இருந்தன. பொதுவாக இந்த அகதிகள் முகாம் என்பது ஒரு சந்தைக் கூடமாகவே இருந்தது. சந்தை இரைச்சல் கடலோசையை விஞ்சி நின்றது.

டாமு நகர முகாமும் கலேவா முகாம் போன்றோ ஈரம் படிந்திருக்கும் மண் தரையை இலேசாகச் சமன்படுத்தியும் ஈரத்தரைமீது மூங்கிற் பாய்களை விரித்தும். சில முகாம்களில் மூங்கில்களை இணைத்துக் கட்டி மேடைகள் போலும் அமைக்கப்பட்டிருந்தன தங்கிப் போகிறவர்களுக்குத் தண்ணீர் வசதிக்கென அருவிகள் கூடிய மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென்பதற்காகப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முகாம்களில் ஐரோப்பிய அதிகாரிகளும். இந்தியத் துணை அதிகாரிகளும், பெயரளவுக்கு மருத்துவரும் இருந்தனர். முகாம்களில் வழங்கப்பட்ட உணவுப் பொருள்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் இல்லாமல் இருந்ததுடன் பலருக்கு இரத்தப் போக்கை உண்டாக்கியிருந்தது. அதே போல் வக்ஸீ முகாம்களிலும் நோய்வாய்ப்பட்டவர்களின் முனங்கல் கேட்டுக் கொண்டிருந்தது. இருந்த இடத்திலேயே. மற்றவர்களுக்கு ஏற்படக்கூடிய அருவருப்பைப் பொருட்படுத்தாமல் நாணமோ. கூச்சமோ இன்றி மலஜலம் கழித்துக் கொண்டிருந்தனர் சிலர். மற்றொரு பகுதியில் 'ஐயோ' என்று சொல்லி அழக்கூட ஆள் இல்லாமல் இறந்து காகிதச்சுவடி ஆய்வுகள்

159