உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




போனவர்களைக் கூலியாட்கள் தூக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதற்கிடையில் ஏனையோரின் சமையலும் சாப்பாடும் நடந்து கொண்டிருந்தது என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார் லும்மிஸ் முகாம். சிட்டா முகம். தும்டாக் முகாம். வான்சிஸ் முகாம். இம்பால் முகாம் டிமாப்பூர் முகாம் முதலிய முகாம் அனுபவங்களையும் ஆசிரியர் விவரித்துள்ளார். ஜவஹர்லால் நேரு பர்மாவுக்குச் சுற்றுப் பயணம் வந்த போது அவரது உரையினை ஆங்காங்குத் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்லும் வாய்ப்பினைப் பெற்றிருந்தும். ஆசிரியர் நெருங்கிய பழக்கம் இருந்தும். அவரது ஜோதி இதழைத் தொடங்கி வைத்திருந்தும், டிமாப்பூர் முகாமில் ஜவஹர்லால் நேரு வருகை தந்தபோது பரிதாபகரமான தாடி மீசை வளர்த்திருந்த தனது தோற்றுத்துடன் அவரைக் காணக் கூச்சம் கொண்டிருந்த செய்தியையும் விவரித்துள்ளார்.

நண்பர்களின் உதவி

தனது வழிநடைப் பயணம் மூலம் உயிருடன் தாயகம் மீண்டதற்கு உதவியாக இருந்த பல நண்பர்களை நன்றியுடன் ஒவ்வோரிடத்திலும் குறிப்பிடுகின்றார். இருப்பினும் ஏனோ அவர் தம் முழுப் பெயர்களையும் அளிக்காது. சுருக்கெழுத்துக்களில் குறிப்பிடுகிறார் வ. கு. சா. வி. வே. ரா, ஹரி, ஏ. வி. ம.. கோ. ரா. ரா இரா.வி.க. மு. பா. நா. ச. எல். எம். சி. மோ. ரா. பா. சு. சி. ஐ. டி. நண்பர்கள். தபால் நிலையத் தணிக்கை அதிகாரிகள். சு ஆ.ம.ந முதலியோர்.

இராமகிருஷ்ண மடத்துத் துறவிகளில் சிலர் கலேவா அகதிகள் முகாம் அருகே இரவு பகலாகத் தங்கி. பிறர் பாராட்டுதல்களை எதிர் நோக்காது, அகதிகள் ஏற்படுத்தி வந்த கழிவுகளை. மனிதக் கழிவுகள் உள்பட அனைத்தையும் அவ்வப்போது தூய்மை செய்து வந்தனர்.

மேலும், இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கடைசியாக உள்ள தொடர்

வண்டி நிலையம் டிமாபூர் ரங்கூனில் இருந்து நடந்து மட்டுமே வந்து டிமாபூரை

அடையும் சிறுபான்மையினர் சில இடங்களில் ஆழ்ந்த நீரோட்டங்களைக் கடந்தும். காட்டுப் பூச்சிகளின் தொல்லைக்கு ஆளாகியும். குடி தண்ணீர் கிடைக்காதும். நடைப் பயணத்தின் களைப்பு மிகுதியினாலும் பலரும் மாண்டனர் இங்கு பரந்த மைதானத்தில் விசாலமாக அமைக்கப்பட்டிருந்த முகாம்களில் உயிரிழக்கும் நிலைக்கு ஆளாகி வந்திருந்த நடைப்பயண அகதிகளுக்கு உணவு. தேவையான உதவிகளை ராமகிருஷ்ண மடத்தினரும். மார் வாரி கஷ்ட நிவாரண சங்கத்தினரும் உணவுகளைப் பரிவோடு கவனித்தும் அளித்தும் சிறப்பான உதவிகளைச் செய்துள்ளனர்.

அதே போல் பாண்டுஸ் தொடர்வண்டிப் பயணத்தில் வண்டி நிற்கும் போதெல்லாம் வழி நெடுக ஆங்காங்கு அக்கம் பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் சுண்டல், வடை, ரொட்டி முதலியவைகளைத் தயாரித்து இலவசமாக வழங்கியும், உபசரித்தும் உதவினர்.

தொடர்வண்டி நிலையத்தில் அருகே அமைக்கப்பட்டிருந்த பெரிய கொட்டகையில் ஆங்கிலோ இந்தியப் பெண்மணிகள் வரும் பயணிகளுக்கு ஆகாரங்களைத் தயாரித்து உபசரித்து உதவினர். இராமகிருட்டிண மடத்துத் தொண்டர்களின் சேவை இங்கும் கிடைத்தது.

160

காகிதச்சுவடி ஆய்வுகள்