உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மேலும் வழிகளில் ஆங்காங்கே உதவி புரிந்த ஒரிசா மாநிலக் கூலிகளின் உபசரணையையும், பர்மிய வண்டியோட்டிகளின் இரக்க உணர்வினையும், மணிப்புரி மக்களின் கனிவான, தூய்மையான, தெய்வ பக்தி மிக்க. உழைப்புக்கு அஞ்சாத, வலிந்து உதவும் பண்பினையும் உணர்ந்து பாராட்டியுள்ளார். அதேநேரத்தில் மனிதாபிமானமற்ற பிறர் துயரில் இன்பம் கண்ட, கொடுமனம் படைத்த படகுக்காரர்களின் செயலையும். சில முகாம் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினையும் கடிந்துள்ளார்.

முடிவுரை

அன்றாடம் துயர் தரும் பயணத்தில் எழுதிச் சேகரித்த குறிப்புகளின் துணையுடன் ஆசிரியர் எதிர் கொண்ட இயற்கை வனப்பும், இன்ப நிகழ்வுகளும் துன்பச் சம்பவங்களும் படிப்போரைத் தாமே அவற்றை உணர்வது போல் செய்கிறது

இப்பயண நூல் வழியே போர்ச் செய்திகளையும், போரின் விளைவுகளையும், நாடு சிதறுண்டு போன அவலத்தினையும், மக்கள் அடைந்த துன்பத்தினையும் நெடும் பயணம் மேற்கொண்ட போது கடந்து வந்த ஊர்கள். எழில் மிகு காட்சிகள். சந்தித்த மக்கள் அவர்தம் வாழ்க்கை. சமுதாய முறைகள், சக பயணிகளின் இயல்புகள். முகாம்கள். உணவு. அதிகாரிகளின் போக்கு முதலியனவற்றை அறிய முடிகின்றன.

காகிதச்சுவடி ஆய்வுகள்

161