உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த. அனுராதா ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

அறிஞர் அண்ணாவின் கடிதங்கள்

முன்னுரை

காகிதச் சுவடிகளில் இலக்கிய, இலக்கண நூல்கள், ஆவணங்கள். நாட்குறிப்புகள் மற்றும் கடிதங்கள் போன்றவை காணப்படுகின்றன. இவற்றுள் காணப்படும் கடிதங்கள் இலக்கிய வகையுள் ஒன்றாகக் கருதப்படுகின்றன.

அறிஞர் அண்ணாவின் சிந்தனையும், எழுத்தும். பேச்சும் இலக்கிய உலகில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கதாகும் இவர்தம் கதைகள் கட்டுரைகள், நாடகங்கள், திரைப்பட வசனங்கள். சுவரொட்டிகள், துண்டு அறிக்கைகள் போன்றவைகள் எழுத்தாற்றல் பெற்றவையாகும். அண்ணா எழுதிய கடிதங்கள் சிறந்த தமிழ் இலக்கியங்களாக விளங்குகின்றன. இக்கடிதங்கள் 'திராவிடநாடு' எனும் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. இக்கடிதங்களில் அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்திகள் போன்றவை காணப்படுகின்றன. இக்கடிதங்கள் புத்தக வடிவில் பல்வேறு தொகுப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் பெரியார் தொடர்பான செய்திகளை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பெரியார்பற்றி அண்ணாவின் கருத்துரைகள்

சுயமரியாதை இயக்கத்தின் தந்தையாகிய பெரியார் ஈ. வெ. இராமசாமி 1919இல் தமது வகுப்புரிமைக் கொள்கையைக் காங்கிரஸ் ஏற்றுக் கொள்வதாகக் கூறியதால் அதில் சேர்ந்தார். 1920இல் ஒத்துழையாமை இயக்கத்திலும், 1921இல் ஈரோட்டிலும் கள்ளுக்கடை மறியலிலும் ஈடுபட்டார். 1923இல் குடியரசு இதழ் தொடங்கினார். 1935இல் ஈ. வெ. ரா. வேலைத் திட்டத்தை நீதிக்கட்சி ஏற்றதால், 1936இல் அக்கட்சியை ஆதரித்தார். 13 -11 - - 1938இல் சென்னையில் திருமதி நீலாம்பிகை அம்மையார் தலைமையில் கூடிய தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற பட்டமும் அளிக்கப் பெற்றார் 1939இல் திராவிட நாடு திராவிடருக்கே எனக் கூறினார் 1942இல் குடியரசு இதழ் நிறுத்தப்பட்டதால் அந்த அச்சகப் பொருள்களைப் பெரியார் கொடுத்துதவ அண்ணாவினால் திராவிடநாடு இதழ் வெளிவரத் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டார். 1955இல் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபட்டார்.

162

காகிதச்சுவடி ஆய்வுகள்