உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மொழிப் போராட்டம்

இந்தித் திணிப்பை எதிர்த்தும் இந்தியக் கூட்டாட்சியில் தமிழர்கள் இருக்க விருப்பமில்லை என்பதை உணர்த்தவும் 17- 07-55இல் திருச்சியில் கூடிய மாநாட்டில் பெரியாரின் ஆகஸ்டுப் போர் பற்றிய அறிவிப்பு வெளியானது. அதில் நாடெங்கும் இந்தியத் தேசியக் கொடியைக் கொளுத்தி அதன் மூலம் வடநாட்டுச் சர்க்காரைத் திராவிடத்தின் மனநிலையை அறியும்படிச் செய்வது என்பது தான் பெரியாரின் போர்த் திட்டமாகும்.

இதன்படி. ஆகஸ்டுப் போரில் எல்லாக் கட்சிகளையும் ஈடுபடும்படி அழைப்பு விடுக்கிறார் எல்லாக் கட்சிகளும் என்றால் நாட்டிலுள்ள அனைத்துக் கட்சிகளும் என்று பொருள் அல்ல. காங்கிரஸ். கம்யூனிஸ்ட் பிரஜா இந்து மகா சபை. தமிழரசு போன்ற கட்சிகள் யாவும் இந்தி மொழிபற்றிக் கொண்டுள்ள எண்ணம் இந்தி கூடாது என்பதல்ல. கட்டாயப்படுத்தி. அவசரப்படுத்த வேண்டாம் என்பதுதான் ஆனால் பெரியாரின் கொள்கை இந்தி கூடாது என்பதும், அதன்மூலம் இந்தியாவின் ஆட்சிக்குள் திராவிடம் இருத்தல் கூடாது என்ற எண்ணமும் கொண்டவர் இவ்வாறு முக்கியக் கொள்கையில் வேறுபாடான கருத்துக்கள் கொண்ட கட்சிகள் எதுவும் 'ஆகஸ்டுப் போர்' என்ற மொழிப் போரில் ஈடுபடாது. இந்தி எதிர்ப்பில் பெரியாரின் கொள்கையைப் பின்பற்றும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகமாகும் ஆனால் இலட்சியம், ஒரேவிதமாக இருந்தும் அந்தக் கட்சியை அழைத்துப் பேசித் திட்டம் மேற்கொள்ளாததால் போராட்டத்தில் ஈடுபடவில்லை.

- -

மத்திய அரசின் சார்பாக நேருவும். மாநில அரசின் சார்பாகக் காமராசரும் கலந்து பேசி இந்தி எதிர்ப்புப் போரினை ஒரு முடிவுக்குக் கொண்டுவர முயன்றார். அதன்படி. மத்திய மாநில அரசின் சார்பாக 30-07-55இல் இந்தி திணிக்கப்பட மாட்டாது என்ற உறுதிமொழியைக் காமராசர் வெளியிட்டார். இந்த உறுதிமொழி வெளியிடப்படும் முன் பெரியாரிடம் காண்பிக்கப்பட்டுத் திருத்தங்கள் செய்யப்பட்டன. இதனால் 31-07-1955இல் ஆகஸ்டுக் கிளர்ச்சியைப் பெரியார் நிறுத்தினார்.

தட்சிணப் பிரதேச முயற்சி

1956இல் காங்கிரசின் தட்சிணப் பிரதேச முயற்சியைப் பற்றித் தமிழர்களிடம் இருக்கின்ற தாய்மொழிப் பற்று. தமிழ் இனப்பற்று. வடமொழி எதிர்ப்பு ஆகிய வெறுப்பு போன்றவற்றை ஒழித்துக் கட்டுவதற்காகவே தட்சிணப் பிரதேசம் என்ற அடக்குமுறை மேற்கொள்ளப்படுகிறது. இது தொடர்ந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடிப் பிணக்காடாகி விடும். அதன் பிறகுதான் காங்கிரசார் புது இணைப்பைக் காணப் போகிறார்கள் என 09-09-55இல் விடுதலையில் தலையங்கம் வெளியானது மொழிவாரி மாகாணப் பிரிவினைக்குப் பின் திராவிடநாடு என்ற கொள்கையைப் புறக் கணித்துத் தனித் தமிழ் நாடு கொள்கையை வலியுறுத்தினார். தட்சிணப் பிரதேச முயற்சியை எதிர்த்து ஒழியச் செய்தார்.

பிராமண எதிர்ப்பு

ஹோட்டல் போன்ற பொது இடங்களில் 'பிராமணாள்' என்ற பெயரை நீக்கும் காகிதச்சுவடி ஆய்வுகள்

163