உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கிளர்ச்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். 26-11-57இல் பிராமணர்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் அரசியல் சட்டத்தை நாடெங்கும் கொளுத்தும் போராட்டத்தை அறிவித்தார். குளித்தலை, பசுபதி பாளையம், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டுவதாகக் காரணம் கூறியும் சட்ட எரிப்புத் தொடர்பாகவும் 06-11-57இல் திருச்சியில் கைது செய்யப்பட்டு உடனே விடுதலை செய்யப்பட்டார். 25-11-57இல் சட்ட எரிப்புக்கு முதல் நாள் திருச்சியில் மீண்டும் கைது செய்யப்பட்டு, திருச்சியில் 3 ட்கள் ரிமாண்டில் வைக்கப்பட்டார். அரசியல் சட்டம் பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என நேரு கூற, அதன் பிறகு சென்னை வந்த நேருவை முட்டாள் நேருவே திரும்பிப் போ ' என்று தமிழர்கள் திரண்டெழுந்து திணற அடிக்க 14-12-57இல் 6 மாத சிறை வாசம் அனுபவிக்கலானார். 1010 பேரைச் சிறைக்கு அனுப்பிச் சென்னை முரளி பிராமணாள் கபே முன் நடத்திய பிராமணாள் அழிப்புக் கிளர்ச்சி சங்கராச்சாரியார் ஆலோசனையுடன் 22-03-58இல் முரளி அய்டியல் ஓட்டல்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

பெரியாரின் பார்ப்பன எதிர்ப்புப் பற்றி அவரின் நண்பர் ஆர்.சீனிவாச ராகவன் என்ற பார்ப்பனரின் பேச்சு

.என்றார்

“தமிழ்த் தாத்தா அவர்களே தமிழ்நாடு தனியாகப் பிரிந்தால் திராவிடக் கழகத்தாரின் கை ஓங்கி திராவிடர் கழகம் பலமிக்கதாகி, பிராமண சமூகத்தைத் திராவிடக் கழகத்தார்கள் ஒழித்து விடுவார்கள் என்று சில பிராமணர்கள் பயப்படுகிறார்கள். இந்தத் தவறான எண்ணத்தைப் போக்கவே பெரியாரைப் பேச அழைத்தேன் 1

இதில் உள்ள மூன்று வியப்புக்குரிய செய்திகள் :-

பெரியார் திராவிடத் தந்தை எனக் கூறப்படாமல் தமிழ்த் தாத்தா எனக் குறிப்பிடப்படுகிறது.

2 பார்ப்பணர் எனக் கூறப்படாமல் பிராமணர் என்ற வார்த்தைதான் குறிப்பிடப்படுகிறது

3) அமைதியான இந்தப் பேச்சுக்குக் காரணம் பேசிய இடம் மயிலாப்பூர் லட்சுமிபுரம் யுவர் சங்கம்

பெரியார் இதற்குக் கூறிய பதில் உரை

பிராமணர்கள் இந்த நாட்டிலே வாழக் கூடாதென்றோ இருக்கக் கூடாதென்றோ திராவிடர் கழகம் வேலை செய்யவில்லை. அது திராவிடர் கழகத்தின் திட்டமுமல்ல திராவிடர் கழகத்தினரும் நானும் சொல்வது பிராமணரல்லாதவர்களும் கொஞ்சம் வாழ வேண்டும். நாங்களும் கொஞ்சம் மனிதத் தன்மையோடு சமத்துவமாக இந்த நாட்டிலே இருக்க வேண்டும் என்பதுதான். இது பிராமணர்களை வாழக்கூடாது

1. அண்ணாவின் கடிதங்கள் இரண்டாம் பகுதி. கடிதம 42, ப. 211

164

காகிதச்சுவடி ஆய்வுகள்