உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உண்மையில் இவரின் திறமையையும், பெற்றுள்ள செல்வாக்கையும் இம்மியளவும் குறைத்து மதிப்பிடாததால்தான் அவர் தன்னிலைக்குத் தகுந்த திட்டம் தீட்டும்போது அது முறையல்ல. இயக்கத்தின் இன்றைய நிலைக்கு ஏற்ற திட்டம் தீட்ட வேண்டும் என்று குறிப்பிடுகிறார் அண்ணா. பெரியாரின் நிலை வேறு: இயக்கத்தின் நிலை வேறு. பெரியாரால் தாங்கிக் கொள்ளக் கூடியதை எல்லாம் இயக்கமும் தாங்கிக் கொள்ள முடியும் என்பது தப்புக் கணக்கு.

காந்தியின் தத்துவங்களைத் தாகூரின் வேதாந்தத்தை நேருவின் அரசியலை அலசிக் காட்டி விளக்க வந்தவர் பெரியார். அவரின் பொதுத் தொண்டில் அளவு தரம் இவைகளைக் கவனிக்கும்போது அவர் உலக நாடுகள் மன்றம் பற்றி. ஊராள்வோர் கூறும் தத்துவம். திட்டம் பற்றி அறியாமையை அகற்றுவது பற்றிப் பேச வேண்டியவர் இன்று அண்ணாவைப் பற்றி. அவரின் பேச்சு. எழுத்து, சொத்து, அகம். சூது. சூழ்ச்சி பற்றி ஆராய்ச்சி நடத்துகிறார். மனித குலம் மடமையிலிருந்து விடுபட வழியென்ன என்ற மகத்தான பணியில் ஈடுபட்டிருந்த பெரியார் அண்ணாத்துரைக்கு ஓட்டுக் கிடைக்காமல் இருக்க என்னென்ன வழிகள் என்று பேசுவது மனவருத்தம் தரக் கூடியதாக இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸின் ஆதிக்க ஒழிப்புக்கு ஜின்னா. அம்பேத்கர். பெரியார் தேவை எனப் பாராட்டும் நிலைக்கு உள்ளவர் பெரியார். அப்படிப்பட்டவரை என் செல்வாக்கை அழிக்கப் பயன்படுத்துவது வேடிக்கை மட்டுமல்ல. கோபத்தையும் ஏற்படுத்துகிறது என்றார் அண்ணா.

காங்கிரஸ் தொடர்பு

பெரியாரின் பேராற்றல் மட்டுமல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒழிக்க உதவுபலை எனக் கருதிய காங்கிரஸ் வாண்டையார். மூப்பனார். கருப்பமபலத்தார் போன்றவர்களையும் ஆலை அரசர்கள். பஸ் முதலாளிகள் போன்றவர்களையும் சேர்த்துக் கொண்டு அழிக்க முனைந்தது.

இச்சமயத்தில் பெரியார் தி. மு. க. வுக்கு இட்ட பெயரே கண்ணீர்த் துளிக் கட்சி என்பது. ஏனெனில் பெரியாரின் பொருந்தாத் திருமணம்பற்றி மனம் குமுறியவர்கள் தெரிவித்த கருத்துக்களை கண்டனக் கணைகள்' என்ற தலைப்பிட்டுப் பத்திரிகையில் வெளியிட்டனர். அந்தத் தலைப்பு அண்ணாவிற்குப் பிடிக்காததால் 'கண்ணீர்த் துளிகள்' எனப் பெயர் மாற்றிச் செய்திகளை வெளியிட்டார். அதனையே பெரியார் கண்ணீர்த் துளிக் கட்சி எனக் குறிப்பிட்டார்.

காங்கிரசுக்குப் பல்வேறு வகையான வலிவுகளிருப்பினும் எதிர்ப்பு அலட்சியப்படுத்த முடியாத அளவிலும் தரத்திலும் வளர்ந்திருப்பதால். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நிந்தித்த காங்கிரசார் நான்கு ஆண்டுகளில் பெரியாரை அணுகி வாழ்கின்றனர் இது பெரியாரின் பேராற்றலுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு. பெரியார். காமராசர் நல்லவர். வல்லவர். நம்மவர் என்று சொல்கிறாரே தவிர

காங்கிரசை அல்ல.

166

கைராட்டை

காட்டு மிராண்டிக் கருவி

காகிதச்சுவடி ஆய்வுகள்