உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆதாரக்கல்வி- காந்தீயம்

தேசீயம்

பைத்தியக்காரத் தனம்

முட்டாள் தனம்

பித்தலாட்டம் என்ற கருத்துக்களைப் பெரியார் மாற்றிக் கொள்ளவில்லை.

இராமன் அயோக்கிய சிகாமணி, சீதை சோரம் போனவள் என்ற கருத்துக்களையும் மாற்றிக் கொள்ளவில்லை. இராமாயணத்தைக் கண்டித்தால் முகம் சுளிக்கும் காங்கிரசார், காமராசரின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதற்காகப் பெரியாரின் அனைத்துப் பேச்சுக்கும் கை தட்டுகின்றனர்.

காங்கிரசின் தலைவர்களுக்குக் கிடைக்காத மதிப்பு பெரியாருக்குக் கிடைக்கிறது. அதற்குக் காரணம் பெரியார் தி. மு. க. வை எதிர்ப்பதுதான்.

60 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிய தேசிய கீதமும், 14 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தேசிய ஆட்சியும் தேசிய ஒருமைப்பாட்டினை ஏற்படுத்தவில்லை. பெரியாரின் பாதத்தைத் தாங்கிப் பிடித்தால்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலையும் பரிதாபமானது என்கிறார் அண்ணா.

இவ்வாறு பெரியாரைப்பற்றி அண்ணா எழுதிய கடிதங்களில் காணமுடிகின்றன. திராவிட இயக்கத்தைப்பற்றியும் அக்கால அரசியல், வரலாறு முதலான பலவற்றையும் இக்கடிதங்கள் வெளிப்படுத்துகின்றன. தமிழ் நாட்டு வரலாற்றுக்கு இக்கடிதங்கள் பேருதவி புரியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

காகிதச்சுவடி ஆய்வுகள்

167