உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




த.ரோஜாபாய் ஆய்வாளர்

அரிய கையெழுத்துச் சுவடித்துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்

டி. கே. சி. யின் கடிதங்கள்

ஒரு மொழியில் உள்ள பலதிறப்பட்ட இலக்கியப் பிரிவுகளில் ஒன்றாகத் திகழ்வது கடித இலக்கியம், மற்ற இலக்கியங்கள் வளர்ந்து பரிணமித்துப் பொலிவு பெற ஒரு தொடக்கம் என்று கூட கூட இதனைக் கூறலாம். ஒலியில் இருந்து தோன்றிய மொழி எழுத்து வடிவம் பெற்றபின் ஒருவருக்கொருவர் கடிதம் வாயிலாகத்தான் தொடர்பு கொண்டனர். எனவே உரைநடை இலக்கியத்தின் தொடக்கநிலை கடித இலக்கியமே எனில் மிகையாகாது.

பொதுவாகக் கடிதம் எழுதுவது வெறும் செய்திக்காகத்தான். அதில் 'நலம் விசாரித்தல்', 'அரிசி விலை எப்படியிருக்கிறது?' 'அக்கம் பக்கம் வீட்டுப் பிரச்சினைகள்', 'காய்கறி விலையேற்றம்', 'மாமனார், மாமியார். சொந்தக்காரர்களின் விசாரிப்புகள்' என்றுதான் இருக்கும். இக்கடிதங்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையே இல்லை.

இத்தகைய காலகட்டத்தில் கடிதம் என்ற சொல்லுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கலை, இலக்கியம் போன்றவற்றை அதில் புகுத்தி வைரமணிமுடி போன்று ஒளிரச் செய்தவர்களுள் இரசிகமணி டி. கே சிதம்பரநாத முதலியாரும் ஒருவர்..

ஐரோப்பிய நாடுகளில், குறிப்பாக ஃபிரான்சிலும், இங்கிலாந்திலும் கடிதங்கள் வாயிலாகவே இலக்கியம் வளர்ந்துள்ளது. உண்மையில் ஃபிரெஞ்சிலும். ஆங்கிலத்திலும் உள்ள உயர்ந்த இலக்கியங்கள் கடிதங்கள் எழுதி எழுதியே பழுத்தவையென்று அறிஞர்கள் கூறுவர்.

இரசிகமணியின் கடிதங்கள் ஒவ்வொன்றும் நேருக்கு நேர் நின்று பேசும்: இலக்கிய மணம் வீசும்: எளிமை. நுணுக்கம், உல்லாசம், நகைச்சுவை. கலைப்பாங்கு. தத்துவ ஆழம். ஆனந்தம் நிறைந்து ததும்பும்; உண்மையில் இவரது கடிதங்களைப் படித்தால் அவர் உயிருடன் இருந்து, நம்மோடு உறவாடிக் கொண்டும். உரையாடிக் கொண்டும் இருப்பது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தும்.

கடித இலக்கியத்தின் சிறப்பிற்குக் காரணம் அதன் இயல்பான தன்மைதான். டி. கே.சியின் கடிதங்களை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம.

168

காகிதச்சுவடி ஆய்வுகள்