உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




சு.சண்முகசுந்தரம்

தேர்வுநிலை விரிவுரையாளர்

தமிழ்த்துறை

தியாகராசர் கல்லூரி

மதுரை

காகிதச் சுவடிகளின் தோற்றமும் வளர்ச்சியும்

காகிதம் இக்காலத்தில் எங்கும் வழங்குகிறது. இரண்டொரு தலைமுறைக்கு முன் இந்தியாவெங்கும் பனையோலையே வழங்கியது.

பனையோலைக்குப் பதிலாகக் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கியது சிறிது காலத்துக்கு முன்தான்.

இன்று பயன்படுத்தும் தாளுக்கு - 1900 வயது. முதன் முதலில் காகிதத்தைக் கண்டு பயன்படுத்தியவர் சீனரே.

மல்பெரி மரப்பட்டையில் இருந்து தாள் செய்தார்கள். பின்பு கந்தல் துணியில் இருந்து தாள் செய்தார்கள். கி. பி 105இல் சாய்லன் என்பவர் இதைக் கண்டுபிடித்தார்.

இந்தக் கண்டுபிடிப்புதான் இதழியலில் முதன்முதல் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

சீனர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த அரேபியர் இவர்களிடம் இருந்துதான் தாள் (காகிதம்) செய்யும் முறையை அறிந்து கொண்டார்கள். அரேபியர் தாளை 'காயிதம்', 'கடுதாசி', 'கடதாசி', 'கடிதம்' என்றெல்லாம் சொன்னார்கள்.

தாள் செய்யும் முறை உலகம் முழுவதும் பரவினாலும்கூடச் சீனத்தாள் சிறப்பாகக் கருதப்பட்டது; தமிழ் நாட்டுக்கும் வந்தது. தமிழில் 'சீனத்தாள்' என்ற புதுச்சொல் பிறந்தது.

கி. பி. 8ஆம் அல்லது 9ஆம் நூற்றாண்டில் பீகிங் கெஜட் (Peking Gazette) என்ற பத்திரிக்கை. மரத்தால் செய்த அச்சுக் கருவிகளைக் கொண்டு வெளியிடப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனையே முதல் காகிதப் பத்திரிக்கையாகக் கருதலாம்.

இதழியல் வளர்ச்சிக்குப் பெருந்துணை புரிந்தவை காகிதமும் அச்சுக்

காகிதச்சுவடி ஆய்வுகள்

197