உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




கலையும் ஆகும். இவை இல்லையென்றால் இதழியல் இந்த அளவிற்கு வளர்ந்திருக்க இயலாது

சீனர்களோடு வாணிபம் செய்த உலக நாட்டினர் காகிதம் செய்யும் கலையைக் கற்றுச் சென்றனர் கி. பி. 795இல் அரேபியர்கள் பாக்தாத்தில் காகிதம் செய்யும் ஆலை ஒன்றை நிறுவினர்.

அச்சுக்கலையும் முதலில் சீனாவில்தான் தோன்றியது மர எழுத்துக்களைச் செய்து. அவற்றில் மை தடவித் தாளில் அழுத்தி (Press) அச்சிட்டனர். அச்சகத்திற்கு 'பிரஸ்' என்று பெயர் வந்ததற்கு இதுவே காரணமாகும்.

கி. பி 1041இல் பிசெங் என்ற சீனாக்காரர் களிமண்ணில் எழுத்துக்களைச் செய்து விட்டு, தகடு சுற்றிக் கடினப்படுத்தி அச்சிடும் முறையைக் கொண்டு வந்தார். அதன் பின்பு அச்சுக்கலையில் புரட்சி ஏற்பட்டது.

காலப்போக்கில் கல்வெட்டுகளைப் போன்றே செப்புப்பட்டயங்களும் அழிவற்று விளங்கின. தங்கத் தகட்டில்கூட எழுதினார்கள். இலங்கையில் அனுராதபுரம் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தங்கத் தகட்டில் எழுதப்பட்ட சுவடி ஒன்று கிடைத்தது. அது 1500 ஆண்டுகள் பழமையானது. மொத்தம் 14 பக்கம் பாலிமொழியில் புத்தரின் அறிவுரைகள் எழுதப்பட்டுள்ளன.

களிமண் சுவடி

எழுதும் ஏடாக ஆமை ஓடு பயன்பட்டு இருக்கிறது. எலும்புகள்மீது எழுதியிருக்கிறார்கள் களிமண்ணைச் சமப்படுத்தி அதன்மீதும் எழுதினார்கள். ரோமர்கள் மரப்பலகைமீது மெழுகை உருக்கி வார்த்து அதன்மீது எலும்பு கொண்டு எழுதினார்கள்.

களிமண் எழுத்துக்கள் (தமிழ் எழுத்துக்கள்) சிந்து வெளியில் கிடைத்தன. பிறகு மரப்பலகைகளில் எழுத்துக்களைச் செதுக்கினார்கள், அச்சு தோன்றிய பொழுதுகூட மரப்பலகைகளில்தான் எழுத்துக்களைச் செதுக்கினார்கள்.

ஏடுகளைச் சுவடி என்றும் சொல்லுவர். கால்தடம் சுவடு எனப்படும் வரி வடிவம் என்பது ஒலி எழுத்தின் சுவடு தானே? எழுத்தின் சுவடு பதிந்த ஏடு 'சுவடி' என்று சொல்லப்பட்டது. 'இனிதினிதாய்' எழுந்த உயிர் எண்ணமெல்லாம் இலகுவது புலவர் தரும் 'சுவடிச் சாலை' என்கிறார் பாரதிதாசன்

காகிதமும் பனை ஓலையும்

1838 சூலை ஆகஸ்டு இதழில் காகிதமும் பனை ஓலையும் என்ற கட்டுரை வந்தது அக்கட்டுரை

ஓலையினாலேயே மதக் கோட்பாடுகள் நிலைபெற்றன; வேதாகமங்கள் நிலைபெற்றன சனங்களுடைய தாவர சங்கம் சுதந்திரங்கள் நிலையாயின. குடும்பங்களின் வம்சா வழிகளும் அவரவர் சாதகங்களும் குறிக்கப்பட்டன.

198

பனையோலை இல்லாவிட்டால் முன் எத்தனையோ ஆயிரவருஷமாய் நம் காகிதச்சுவடி ஆய்வுகள்