உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காகிதச் சுவடி ஆய்வுகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னோர்கள் தாம் அடைந்த சீர்திருத்தத்தின் பயன் பிற்காலத்தவருக்கு எட்டாமல் அழிந்து போயிருக்குமே எனக் கூறுகிறது (பக். 38 - 40),

பேப்பைரசு

தமிழர்கள் பனையோலையில் எழுத்தாணி கொண்டு எழுதிக் கொண்டு இருந்தபொழுது எகிப்தியர்கள் 'பேப்பைரசு' என்னும் நாணல் புல்லை எழுதும் ஏடாகப் பயன்படுத்திக் கூர்மையான எலும்புத் துண்டு கொண்டு எழுதினார்கள்.

இந்த பேப்பைரசு' என்பதிலிருந்துதான் 'பேப்பர்' என்ற சொல் பிறந்தது. இத்தகைய பேப்பைரசு சுருள்களைக் கிரேக்கர்கள் பிப்பிலியன்' என்றார்கள். இதற்கு 'நூல்' என்று பொருள். இதிலிருந்து 'பைபிள்' என்ற சொல் உண்டாயிற்று.

வளர்ச்சி

சீனர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டு இருந்த அரேபியர் அவர்களுடன் இருந்து காகிதம் செய்யும் முறையை அறிந்து கொண்டார்கள். அரேபியர் தாளை 'காகத்' என்றார்கள். 795ஆம் ஆண்டில் பாக்தாத்தில் தாள் ஆலை ஒன்றை அரேபியர்கள் நிறுவினார்கள்.

அரேபியர்களிடம் இருந்து இந்த வித்தையை இந்தியர்கள் கற்றார்கள் இவர்கள் 'காகிதம்', 'காயிதம்'. 'கடுதாசி'. 'கடதாசி', 'கடிதம்' என்றெல்லாம் தாளைச்

சொன்னார்கள்.

எழுதப்பட்ட தாள் 'தாளிகை' என்றும் 'பத்ரம்', 'பத்திரிகை' என்ற பெயர் பெற்றது போலக் காகிதம் 'கடிதம்' என்று ஆயிற்று ஆகவே தாள் அஞ்சலைக் 'கடிதம்' என்கிறோம்.

சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ்ப் பேரகராதியில் 'சீனக் காகிதம்' என்ற சொல் காணப்படுகிறது.

1577இல் கோவாவில் அச்சான முதல் தமிழ் நூல் சீனத் தாளில் அச்சிடப்பட்டது.

அண்ணாமலைச் செட்டியார் காவடிச் சிந்தைத் 'திக்குக் காகிதம்' என்று விளம்பரம் செய்தார்கள்.

இன்று உலகம் முழுக்க 7000 வகைத் தாள்கள் தயாராகின்றன.

தாள்களில் ஒன்று எழுதும் தாள்; மற்றொன்று அச்சுத்தாள். மேலும் இரு பிரிவைச் சேர்த்து ஒன்று வணிகத்தாள். அணித்தாள். அதில் ஒன்று பொருள்களும் மற்றொன்று இல்லங்களை அழகு படுத்த மெல்லிய வானவில் போன்ற வண்ணத்தாள்.

'சன்' காகித ஆலை வெள்ளி விழா மலரில் (1986) தாளைப் பற்றிக் காணப்படும் சில விவரங்கள்:

உலகத் தாள் தயாரிப்பில் இதழ் தாள் 15 விழுக்காடு.

காகிதச்சுவடி ஆய்வுகள்

199